பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நம்முடைய கை பயன் அற்ற கை ஆகிவிடும். அவன் கை, வேல் எடுக்கும் தன்மை உடையது. அஞ்ஞானத்தைப் போக்குவதற் குரிய திருவிளையாட்டைச் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டது. நம்முடைய கை செயல் ஒழிந்து அவன் முன்னால் குவிவதையே கடமையாகக் கொள்ள வேண்டும். "ஆண்டவனே, குரங்குகளின் பிய்க்கின்ற கையை, பிரிக்கின்ற கையை, மலைகளைத் தூக்கி வருகின்ற கையாகவும் கடலை அடைத்துப் பாலம் கட்டும் கையாகவும் செய்த உன் மாமாவின் பெருமை எனக்குத் தெரியும். நஞ்சைக் கக்குகிற பாம்புகளை அடக்கிச் சந்திரனிடம் அது கொண்ட பகையை மாற்றி, தம் அருகிலேயே ஆபரணமாக வைத்துச் சூட்டிக் கொண்டிருக்கிறார் உன் தந்தை. அவர் பெருமையும் எனக்குத் தெரியும். அந்தக் குடும்பத்தில் பிறந்தவன் நீ என்பதை நன்கு தெரிந்து கொண் டிருக்கிறேன். அவற்றோடு உன் பெருமையும் எனக்குத் தெரியும். எல்லா வகையாலும் திறம்படைத்த அரக்கர்களது உலகத்தில் வேதனை ஆரவாரம் எழும்படியாகப் போர் வேலைத் தொட்ட பெருமான் நீ. அஞ்ஞானத்தால் என் மனம் ஆகிய குரங்கு எதை யும் கட்டத் தெரியாமல் பிரித்துப் போட்டுக் கொண்டு சலித்து வருகிறது. பொறிகளாகிய படங்களை உடைய என்னுடைய மனமாகிய பாம்பு நஞ்சு போன்ற துன்பத்தை உண்டாக்குகிறது. அதனை அடக்கும் ஞான சக்தியாகிய வேல் உன்னிடத்தில் அல்லவா இருக்கிறது? ஞான வேலாயுதத்தை உடைய பெருமானே! உன்னை அணுகி, உன் திருச் சந்நிதானத்திலே அன்பால் குவியாத கரங்களை நான் படைத்திருக்கிறேனே! கை இருந்து என்ன பயன்? கர்மேந்திரியங்களுக்குள் மிகவும் சிறப்பான கையே எனக்குப் பயன்படாது போய்விட்டால் மற்றக் கருவிகள் எப்படிப் பயன்படும்?' என்று நினைத்து, அந்த நினைப்பின் சாரமாக இந்தப் பாட்டை அருணகிரிநாதர் பாடுகிறார். முருகனைப் போற்றிஅன்பால் குவியாக் கரங்கள்வந்து எங்கே எனக்குஇங்ங்ன் கூடியவே? அன்பாற் குவித்தல் நம்முடைய கைகள் பல சமயங்களில் குவிகின்றன. தேர்தலில் எனக்கு வோட்டுப் போடுங்கள் என்று எத்தனையோ பேர்களுக்கு 214