உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

51



பார்வையில் இருக்கவேண்டும். குதிகால்களின்மீது பிட்டம் (பuttock) இருப்பதுபோல முதலில்அமர்ந்திருக்கவும்.

(அ) முதல் வகை பஸ்கி:

உடலை நிமிர்த்தி, இடது கையைமடக்கி நெஞ்சுக்கு முன் புறத்தில் கொண்டுவந்து, இடதுகை கட்டைவிரலை நெஞ்சுக்கு நேராக நிறுத்தி, அதே சமயத்தில், வலது கையை தரைக்கு இணையாக முன் நோக்கி இருக்குமாறு நீட்டித் தரையைத் தொட வேண்டும்.

குறிப்பு: உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு வலது கையை முன்புறம் நீட்ட வேண்டும்.

அடுத்து, வலது கையை நெஞ்சுக்கு நேராக கொண்டு வந்து, வலது கை கட்டைவிரலை நெஞ்சுக்கு முன் வைத்து, இடது கையை தரைக்கு இணையாக முன் நோக்கி நீட்ட வேண்டும்.

இவ்வாறு மாறி மாறிச்செய்ய வேண்டும்.

(ஆ) இரண்டாம் வகை பளல்கி

முழங்காலில் உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து கால்பாக அளவு (யெarterTwist) உடலை இடப்புறம் திருப்பி, இரு கைகளையும் இடப்புறமாக திருப்பி, இடப்புறம் உள்ள தரையைத் தொடவேண்டும். இரு கைகளையும் நெஞ்சின் முன்புறமாக நீட்டி, பின்னர் தாழ்த்திக் கொண்டு சென்று தரையில் பதிக்கவும். பிறகு, முன்பிருந்த நிலைக்கு வந்துவிடவும்.

இதைப்போலவே வலப்புறமும் செய்ய வேண்டும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.