பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்

தொடர்புகளைக் கண்டறிந்தார். என்ற விதியின்படி, E-Mc² என்ற சமன்பாடு தோன்றும் விதம் அல்ஜீப்ரா கணக்கைப் புரிந்தவர்களுக்கு அதன் உண்மை தெரியும்.

பொருள் ஒன்றின் பகுதியில் Particle புதைந்து கிடைக்கும் ஆற்றல், அப்பொருளின் பொருண்மையைக் கிராமங்களில் ஒளிவேகம் X ஒளிவேகம் என்பதனால் பெருக்கி வரும் தொகைக்கு சமமாகும் என்ற உண்மையினையே இந்த சமன்பாடு விதி கூறுகிறது.

E - MC² என்றால், அதன் விளக்கம் இது.

Energy — Mass X Velocity of light
X Velocity of light

அதாவது, சக்தி - பொருண்மை X ஒளியின் வேகம்.X ஒளியின் வேகம் என்பதே விதி.

இந்த விதியால் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்; பொருளின் மிகச்சிறிய நுண்பகுதிகளான அணுக்களில் அடங்கி இருக்கும் சக்தியை, ஆற்றலை வெளியே கொண்டு வருவதற்குரிய அனுகூலங்கள் உள்ளன என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

அணுத்துகள்கள் சிதைவுறுகின்றபோது, உண்டாகும் பொருண்மைக் குறைவு, அளவுக்கு அதிகமான ஆற்றல் சக்திகளாக மாறுகிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளார்கள்.

நியூட்ரான்கள் Neutrons யூரேனியம் என்ற பொருட்களின் மேல் மோதுவதால், தொடர் விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த செயல்களால் அதிகமான ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. அதனால், அணுச்சிதைவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. அந்த சக்திகளுக்கு உகந்தவாறு அதன் ஆற்றலும் வெளிப்படுகிறது. அணு-