பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு

ஒருவனுக்கு நல்ல எண்ணங்களும் நல்ல பழக்கங்களும் வரவேண்டுமானால், அவனாக முயன்றால் எளிதில் அந்த முயற்சி கைகூடாது. நல்லவர்களோடு சேர்ந்து பழகினால் அவன் விரும்பாவிட்டாலும் அவனை அறியாமல் நல்ல பழக்கங்கள் அவனிடம் உண்டாகும். மனிதனைச் சமுதாய s@avrăl@j (Social Animal) Grøði gy) சொல்வார்கள். அவன் தனித்து வாழ இயலாது. பல மக்களிடையே கூடி வாழ்வதே மனிதனுடைய இயல்பு. ஒவ்வொரு வீட்டிலும் சில சில சிறப்பான பழக்கங்கள் இருக்கும். அந்த வீட்டில் பிறந்தாலும் வளர்ந்தாலும்,அந்தப் பழக்கங்கள் எளிதில்

ஒநாய்ப் பையன் ஒருவனைப்பற்றிய செய்தி முன்பு பத்திரிக்கைகளில் மிக விசேஷமாக அடிபட்டது. அந்தப் பையனைக் காட்டிலிருந்து மீட்டு வந்த பழக்கினாலும் அவன் கையால் உணவை எடுத்து உண்ணத் தெரியாமல். வாயினாலேயே உண்டானாம் இளமை தொடங்கி வந்த பழக்கம் அது. நல்ல பழக்கங்களும் அப்படியே அமையும். . -

ஆகவே தெய்வ வழிபாடு,தெய்வத்தைத் துதித்தல், தியானித்தல், பூசை செய்தல் முதலியவற்றை முயன்று பழகிக் கொள்வதைவிட அவற்றைச் செய்வார்களோடு சேர்ந்து நெருங்கிப் பழகினால் அவை தாமே எளிதில் படிந்துவிடும். அதனால்தான் பெரியவர்கள் சாதுக்களின் சங்கம் அருள நுபவம் பெறும் வழியில் நமக்குத் துணை திற்கும் என்று சொல்கிறார்கள். . .