பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கருணை வீரம்

வனை முருகன் கொன்றது ஓர் இமைப் போதினில்தான் என்கிறார். முருகன் திடீரென்று அவனுக்கு எச்சரிக்கை எதுவும் செய்யாமல் கொன்றுவிடவில்லை. அவனோடு பலகாலம் போரிட்டான். இதற்குள் ஒரு விநாடியிலாவது அவனுக்கு ஞானம் பிறந்து, "இறைவனே என்னை மன்னித்துவிடு" என்று அவன் காலில் வந்து வீழ்ந்திருந்தாலும் முருகன் மன்னிக்கக் காத்துக் கொண்டுதான் இருந்தான். கடைசி நிமிஷத்திலாவது அவன் சரணாகதி அடைய மாட்டானா என்பதுதான் அவன் ஆசை. கெட்டவர்கள் நல்லவர்களாக மாற வேண்டுமென்பதுதானே இறைவனுடைய ஆசை? பொல்லாதவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டுமென்று நினைப்பவன் அல்ல ஆண்டவன்.

ஒரு குழந்தையை வெளியே போகாதே என்று சொல்லுகிறாள் தாய். தாயின் சொல் கேளாது அந்தக் குழந்தை வெளியே போகிறது. எங்கோ விழுந்து, காலில் ரத்தம் சொட்ட, "அம்மா!" என்று அழுதுகொண்டே திரும்ப வீட்டிற்குள் வருகிறது. அம்மாவுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவள் என்ன செய்கிறாள்? "நான் அப்போதே சொன்னேனே! ஏன் வெளியே போனாய்?" என்று அந்தக் குழந்தையை மேலும் படார் படார் என்று அடிக்கிறாள். அவள் போகாதே என்று சொன்னது உண்மை. அதைக் கேளாமல் அந்தக் குழந்தை வெளியே போனது தவறுதான். அந்தப் பிழைக்கு அவள் தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? "இன்றைக்குப் பண்ணியிருக்கிற பட்சணம் தர மாட்டேன்" என்று சொன்னால் போதும். அது தண்டனை. ஆனால் தன் வார்த்தையைக் கேட்கவில்லை என்பதனால் அவளுக்குக் கோபம் உண்டாகிறது. குழந்தையை அடிக்கிறாள். அதனால் தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறாள். இது தண்டனை ஆகாது. கோபத்தால் அடிக்கிறவள், கால் வலியோடு அடியின் வலி வேறு சேர்கிறதே என்பதை மறந்து விடுகிறாள்.

சூரனிடம் சினம் மூண்டு அவனை அழித்துவிட வேண்டும் என்று முருகன் நினைக்கவில்லை. அவனுக்குத் தண்டனை கொடுத்து வழிப்படுத்த எண்ணினான். இறைவன் நல்ல காரியத்தைச் செய் என்று ஆணையிட்டபோதிலும், கெட்ட காரியங்

156