பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

"திரிகட தொங்கிட திரிகட திங்கிட
தித்தீ செக்கண செக்கண மொழிந்து
கூத்த னைத்தும் நவில்வன."

பேய் விளையாட்டு

வ்வாறெல்லாம் பாடிய அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலும் பேய் விளையாட்டை வருணிக்கிறார். பாட்டின் ஒசையே பேய்கள் குதிப்பதை நினைவூட்டுகின்றது.

"அவுணர் உரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்துவெற்றிக்
களத்திற் பெருக்கிக் கழுதாட வேல்தொட்ட
காவலனே!”

அவுணர் என்பது அசுரருக்குப் பெயர். அவர்களுடைய மார்பிலிருந்து பெருகிய ரத்தம் குளமாகத் தேங்கிக் கிடக்கிறது. இந்தக் காட்சி நிகழும் இடம் போர்க்களம்; முருகன் அவுணரைப் பொருது வெற்றிக் கொண்ட களம். வேலைப் பிரயோகம் செய்து அவன் வெற்றி கொண்டான்.

முருகன் வென்ற போர்க்களத்தில் அவுணர் உடம்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் பேய்கள் குதிக்கின்றன. குதித்துக் குதித்து எழுகின்றன. குளிக்கின்றன. அவற்றிற்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? பல காலம் பசியால் வாடிய உடம்பையுடைய அவற்றிற்கு அப்போதெல்லாம் ஒரு துளி ரத்தம் கிடைக்கவில்லை. இப்போது ரத்தக் குளத்தில் மூழ்கிக் கொம்மாளம் இடுகின்றன. அதைக் குடிக்கின்றன. களிப்புக்குக் கேட்க வேண்டுமா? கழுது என்பது பேய். இப்படிப் பேய்கள் வெற்றிக் களத்தில் செருக்கி ஆட வேலை விட்டான் முருகன்.

களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட
காவலனே!

மார்பிற் புண்

முருகன் சிறந்த வீரன். போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஒடுகிறவர்களைக் கொல்கிறவன் வீரனாகமாட்டான். புறமுதுகு

232