30
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
நகரத்தை நிர்மாணிக்கத் திருவுள்ளம் கொண்டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒரு சிற்பியை வரவழைத்துக் கோடைக் கொடுமையினின்றும் தப்பி ஆங்கிலேயர் வாழ்வதற்கு உரிய நகரத்தை அமைக்கும்படி ஏவினார். நகரத்தை அணி செய்வதற்காக மனத்திற்கு இதமான ஒரு பூங்காவையும் அமைக்க வேண்டும் என்று ஒரு பெரிய திட்டமும் போட்டார், சிற்பி. அவருடைய கற்பனையில் விதம் விதமான பூச்செடிகள் பூத்துக் குலுங்கின: விதம் விதமான மரங்கள் கப்பும் கிளையுமாய் வளர்ந்து வானைத் தொட்டுக்கொண்டு நின்றன. அவர் உள்ளத்தில் தோன்றிய நயமான சோலையை அவரோடு ஒத்துழைத்த மற்றவர்கள் காணவில்லை.
ஒரு பனைமட்டையைக் கையில் வைத்துக்கொண்டு, கண்ணாம்பு நீரில் அதை அமுக்கி ஒரு கோலம் போட்டுக் கொண்டே சென்றார், சிற்பி. பின் சென்றவர்கள் அவர் கட்டளைப் படி அந்தக் கோலத்தின் புள்ளிகளிலும் வளைந்து நெளியும் கோடுகளிலும், விதைகளை விதைத்தார்கள்; செடிகளை நட்டார்கள்; பதியங்களைப் பதித்தார்கள். பலப்பல ஆண்டுகள் உருண்டோடின. அதற்குப் பிறகுதான் இப்போது உதகையில் நாம் காணும் அற்புதமான பூங்காவை (Botanical Garden)- நனவாகிய சிற்பியின் கனவை மற்றவர்களும் கண்டு மகிழ முடிந்தது. மற்றவர்களுக்கு அருவமாய் இருந்த சிற்பியின் அகக்காட்சி இப்போது மற்றவர்களுக்கும் காணக்கிடைத்த புறக்காட்சியாய் உருவாயிற்று.
இதனைப் போலவேதான், இறைவன் என்ற சிற்பியின் அகக்காட்சியிலே தோன்றியது, பேரண்டம்; பின்னர், அது புறக் காட்சியாய் மாறியது. வெறும் பாழாய் இருந்த எல்லையிலாப் பர வெளியில், பல்லாயிரங்கோடி அண்டங்கள் பூத்து மலர்ந்தன. சூரிய சந்திரர்களும் விண்மீன்களும் தோன்றி மாபெரும் உருளைகளைப் போல வெட்ட வெளியில் சுழன்றன; சுழல்கின்றன. ஒரு கணக்குப்படி சுழல்கின்றன; ஒன்றோடொன்று மோதாமல், யாரோ இட்ட கோலங்களின் கோடுகளிலும் புள்ளி களிலும் ஆணைக்கு அடங்கி நின்று, கற்பனை கடந்த வேகத்தில் சுழல்கின்றன. அந்த ஆங்கிலச் சிற்பியிட்ட கோலத்தினுள்ளும் புள்ளிகளினுள்ளும் இட்ட விதைகளினின்றும் பதித்த பதிகங் களினின்றும், காலத்திகிரியின் சுழற்சியிலே வெளிவந்த உதக மண்டலப் பூங்காவைப்போல, பேரண்டப்-