உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


அந்நிறுவனத்தால், மாலப் பத்திரிகைகளும் வெளியிடப்பட்டன.

தாளிதழ் என்பது உலக விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான சாதனம் என்பதைவிட வம்பளப்பு - அக்கப் போர்- கிசுகிசுச் செய்தி வகையராக்களைத் தொகுத்துத் தரும் தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

பத்திரிகைத் துறையில் போட்டியிட்டு வளரத் துடித்த இதர நாளிதழ்களும் தினத்தந்தி யின் போக்கைப் பின்பற்றுவதே வெற்றிக்கு வழி என்று தீர்மானித்து அதே பாதையில் போவது தவிர்க்க முடியாத நிலமை ஆகிவிட்டது.

சுதத்திரத்திற்குப் பின்னர், வேகவளர்ச்சி பெற்றவிட இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் பெயர்பெற்ற பச்சாளர்களும், தத்தமக்கு என்று தனித்தனி ஏடுகள் ஆரம்பித்தார்கள். வாரம், மாதமிருமுறை, மாதம் என்ற கால அளவில் வெளிவரக்கூடிய பத்திரிகைகள் அநேகம் தோன்றின.

விவர் எதிர்ப்பு, ஆரியர் (பார்ப்பனர்) எதிர்ப்பு, மத எதிர்ப்பு கடவுளர்னதிர்ப்பு:என்று எதிர்மறை நோக்கில் பலவகையிலும் சமூகத்தில் முக்கியமாக் இளைய தலைமுறையினரிடையே, ஒரு வெறுப்புக் கலாசாரத்தை அவை வளர்த்தன. சிந்திக்கத் துண்டும் செயலையும், சிந்தனையாளர்கள் சிலரைப் பற்றிய தகவல்கள் மற்றும் கட்டுரைகளையும் அவை தந்ததை - மறப்பதற்கில்லை. அழகான தமிழ்நடையை-அடுக்குமொழி மேடைப்பேச்சு நடையை - பலப்பல இளைஞர்கள் எழுதக் கற்றுக்கொண்டதும் இப்பத்திரிகைகளின் தாக்கத்தினுல் தான் என்றும் சொல்லலாம்.

'பாரதிதாசன் பரம்பரை' யில் அதிகமான கவிஞர்கள்