பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


உணர்ந்தவர்கள் - உணர்கிறவர்கள்-மக்களுக்கு அவர்களுடைய உண்மை நிலையை உணர்த்தி, அறிவு விழிப்பு ஏற்படுத்தி, அவர்களையும் சிந்திக்கத் தூண்டி, தங்களுடைய அவல நிலை நீங்கவும் சமூகம் மேம்பாடு அடையவும் செயல் புரியச் செய்ய வேண்டும் என்று சிந்தனையாளர்களும், தலைவர்களும், அறிஞர்களும் தாங்கள் கண்ட உண்மைகளை எடுத்துச் சொல் வதற்கு பத்திரிகைகளைப் பயன்படுத்தலானார்கள்.

மக்களின் ஆதரவைப் பெற ஆசைப்படுகிற அரசியல் கட்சிகளும் பத்திரிகைகளை தங்களுக்குரிய கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்தலாயின.

கால ஓட்டத்தில், பத்திரிகைகளின் வளர்ச்சியையும், நாட்டில் அவைகளுக்கு இருக்கிற வரவேற்பையும் புரிந்து கொண்டு, பத்திரிகையையும் லாபம் தேடித் தரக்கூடிய ஒரு தொழிலாக, வெற்றிகரமாக நடத்த முடியும் என்று பண அதிபர்கள் பத்திரிக்கைத் துறையில் புகுந்து வெற்றிகரமாகச் செயல்புரியலானார்கள்.

இந்த அடிப்படையில் தான், எல்லா நாடுகளிலும், பத்திரிகைகளின், வரலாறு அமைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலைமை தான்.

இன்று தமிழில் பல நாளேடுகளும், பலப்பல வாரப் பத்திரிகைகள், மாதமிருமுறை வெளியீடுகள், மாத இதழ்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன.

ஆகவே, வாசகர்களின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் பெருகியுள்ளது என்பது புரிகிறது. ஆனால், வாசகர்களின் தரம் உயர்ந்திருக்கிறதா? மக்களின் அறிவுத்-