பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பொருள் இருந்தால் போதாது. அருள் இல்லாவிட்டால் இவ் வுலகில் வாழ முடியாது. "அருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு' என்று வள்ளுவர் சொல்கிறார். அதனால், அருள் இந்த உலகத் திற்கு வேண்டியதில்லை. இந்த உலகத்தில் பொருள் இல்லா விட்டால் இன்பம் இல்லை' என்று சிலர் சொல்வர். அப்படிச் சொல்வது முறையன்று. இந்த உலகத்தில் அருளைப் பெறாதவர் களுக்கு அந்த உலகம் இல்லை. இந்த உலகத்தில் வாழும்போதே அருளைச் சேமித்துக் கொள்ள வேண்டும். அது மறுமையில் பயன்படும். இங்கே அருளும் பொருளும் உடையவன் இம்மையும் மறுமையும் நல்வாழ்வு பெறுவான். இதுதான் அக்குறளுக்குப் பொருள். பொருள் மாத்திரம் இருந்தால் வாழ்ந்துவிடலா மென்பதை மறுக்கிறார் அருணகிரிநாதர். அருள் இருந்தால்தான் அந்தப் பொருளினால் நல்ல பயனை அடைந்து வாழ முடியும். அருள் தரும் முருகனைப் பணிந்து வாழ வேண்டும். “அவன் திருவடிகளைப் பணியாமல் வாழ்ந்துவிடலாம் என நினைக்கிற மதி அற்றவர்களே, நீங்கள் நினைப்பது முடியாத காரியம் என்று அறிவுறுத்துகிறார் முனிவர். இவ்வுலகிலுள்ள கோழி சூரியன் கிளம்புகிறான் என்பதற்கு அடையாளமாகக் கூவுகிறது. முருகன் திருக்கையில் உள்ள கோழி ஞான சூரியனான ஷண்முகநாதப் பெருமானை நினைத்துக் கூவுகிறது. புறத்தில் இருக்கும் இருள் விடிவது போல, அகத்தில் இருக்கும் இருள் விடிந்தால்தானே உண்மையாக வாழ முடியும்? வாழ்வு என்பது என்ன? வாழ்வு என்பது என்ன? ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்ந் தான் என்றால் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தான் என்பது பொருள் அல்ல. நல்ல நெறியில் இன்பமாக வாழ்வதே வாழ்வு; நல்லது அல்லாத வழியில் வாழ்நாள் போவது தாழ்வு. அவன் நன்றாக வாழ்ந்தவன் என்பதற்கு நல்ல நெறியிலே சென்று இன்ப வாழ்வு வாழ்ந்தவன் என்பதே பொருள். உயிரும், உடம்பும் ஒட்டிப் பல காலம் கிடப்பதை நல்ல வாழ்க்கை என்று சொல்ல இயலாது. i2O