இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“அறிவிலே தெளிவு நெஞ்சிவே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை அருளாய்!
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தளிப்பரம் பொருளே!”
- பாரதியார்
அறிஞர் பெருமக்களே!
மாணவச் செல்வங்களே!
இன்றைய பொழிவு ‘அறிவியல் நோக்கில் சமயம் தத்துவம்’ பற்றியது. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரையில் இதனை மனநிறைவு கொள்ளும்வரையில் ஆற்ற முயல்கின்றேன்.
சொற்பொழிவுத் தலைப்பில் நுழைவதற்கு முன்னர் ‘சமயம், தத்துவம்’ என்ற இரு சொற்களின் பொருளை நோக்குவோம்.