பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

77


இறந்த காலம், அதற்கு வைத்திருக்கும் பெயர் பூதம்.

நிகழ்காலம், அதற்கு வைத்திருக்கும் பெயர் வர்த்தமானம்.

எதிர்காலம், அதற்கு வைத்திருக்கும் பெயர் பவிடியம்.

இந்த மூன்று காலத்தையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு அனைவருக்கும் அன்னையாக இருந்து அருள் பாலிக்கும் இயற்கையின் அமைப்பும், மானிட தேகத்தின் அமைப்பும் எப்படி ஒத்து இருக்கின்றன என்று காண்போம்.

இயற்கையின் அமைப்பு.

1. அடி பாகத்தில் நிலம்
2. நிலத்திற்கு மேற்பகுதி நீர்
3. நீர்ப்பகுதிக்கு மேலே தீ
4. தீப்பகுதிக்கு மேலே காற்று

5. காற்றுப் பரப்புக்கு மேலே வானம்.

இந்த ஐந்தும் அமைப்பு ரீதியாக அடுக்காக நம் பூதக் கண்களுக்கு தெரிவது போல அடுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கும் பொழுது ஞானக் கண்களுக்கு வியப்பையும், மலைப்பையும் தருகிறது.

இயற்கையின் கூறுகள், அதாவது பஞ்ச பூதங்கள் என்னென்ன செய்கின்றன. அவற்றின் சுபாவம் என்ன என்பதைப் பாருங்கள்.