பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

என்கிற விவரம் தெரிந்ததும் உமைபாலனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது : ‘பாவம் !”...

கடிகாரம் ஓடியது.

ஜெயராஜ் புறப்பட்டுவிட்டான் ! நேர்த்தியான ஸில்க் ஷர்ட் மேனியில் மின்னியது. அவன் துள்ளிக் குதித்து உள்ளே ஆளோடியை அடைந்தான். "பாலா ... ! " என்று குரல் கொடுத்தான்.

அங்கே ஒரு மூலையில் உமைபாலன் குந்தி பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்த ஜெயராஜ், ‘நான்தான் உனக்குக் காசு தாரதாச் சொன்னேனே, பின்னே நீ ஏதுக்கு இன்னிக்கும் இதைச் சாப்பிடனும் ? ’ என்று பரிவுடன் வினவினான்.

கடைசிக் கவளத்தை வழித்துப் போட்டுக் கொண்டான் உமைபாலன். சுண்டல் குழம்பைத் தொட்டுச் சுவைத்தபடி இலையைச் சுருட்டி வீசிக் கை கழுவித் திரும்பியதும் அவன் சொன்னன்: “கடன் வாங்கி இட்டிலி சாப்பிடுறதைக் காட்டிலும் இதுதான் எனக்கு நிம்மதி ராஜ்! எங்க மாதிரி ஏழை பாழைங்களுக்கு வயிறும் ஆசையும் சுருங்கித்தான் இருக்க வேணுமாக்கும் ! உனக்கென்ன, ராஜா! நிஜமாகவே நீ ராஜாதான் என்கிற விஷயத்தை இப்பத்தான் அறியமுடிஞ்சுது!... உன்னோட பட்டுச் சொக்காயே சொல்லுதே நீ பெரிய இடத்துப் பிள்ளை என்கிறதை ! ... ”

ஜெயராஜ் முகம் திடுதிப்பென்று கறுத்தது. “ சரி, புறப்படு!” என்று தூண்டினன்.

இருவரும் கை கோத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/23&oldid=1162592" இலிருந்து மீள்விக்கப்பட்டது