பக்கம்:உயிரில் கலந்தது.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம்

‘வாழ்வாவது மாயம்’ என்றார்கள் சித்தர்கள்; “மண்ணுவது திண்ணம் என்றும் உறுதி பூண்டார்கள் அவர்கள். ஆதலால்தான், உடலேயும் மாயையெனக் கொள்ளத் தலைப்பட்டார்கள். இ வ் வ ரி ைச யி ல், பெண்ணையும் சேர்த்துக்கொண்டார்கள். இவர்கள் கண் கட்டு வித்தைக்காரர்கள்: - வாழ்க்கையை வாழ்க்கையாகக் கணிக்கவும் காணவும், பண்பான - பரந்த மனம் வேண்டும். இத்தகைய மனப்பக்குவம் வாய்க்கப் பெற்றால், பெண்ணைப் புதிர் எனவும், பெண்ணை மாயை

எனவும் பேசமாட்டோம்:

பெண் எனும் பிறவி, புனிதப்பூ! அவளுக்கு ஒரு பிறவி, ஆளுல் பல அவதா சங்கள்! -

அவளுக்கு உயிர் ஒன்று; உயிர்ப்புக்கள் பல உண்டு!

பெண் மனத்தைச் சொல்லிக் காட்டாத பேணுக்கள் இல்லை.

ஆளுல், நான் அறிமுகப்படுத்தப் போகிறவள் பொற்புடைப் பூவை.

அந்தப் பெண்ணைக் கையெடுத்துக் கும்பிடு கின்றேன். நான்.

என்னுடைய தனித்தன்மையை நீங்கள் உணர் வீர்கள். .

ஆகவே, இப்புதினத்தின் புத்தம் புதிய தத்துவ அழுத்தத்தையும் உங்களால் அனுமானம் செய்து கொள்ள முடியுமென்றும் நம்புகிறேன். .

பூவை. எஸ். ஆறுமுகம்.