பக்கம்:உயிரில் கலந்தது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாசத்தின் அலேக்குமிழ்

மலர்ந்த மல்லிகைப் பூக்களை மேனியில் ஒட்டிக் கொண் டாற்போன்று காட்சியளித்த நாய்க்குட்டி ஒன்றை மார்புடன் அணைத்த வண்ணம், வண்ணப் பசுமையைப் போட்டிக்கு இழுக்கும் செருக்குடன் காட்சியளித்த திரை அழகி பத்மினி யின் ஒவியம், ஒளி வெள்ளச்சுவரை ஒளி உமிழ் அலங்காரம் செய்து கொண்டிருந்தது!

ஞானசீலனின் வாசஸ்தலம் அது, கோடை ஆகட்டும், குளிர் ஆகட்டும் எல்லாப் பருவங்களும் அந்த அறையில் நுழை யாமல் தப்ப முடியாது.

தேசப்பற்றுக் கொண்ட அரசியல் தலைவர்கள் எனில், அவருக்கு ஒரு பற்றுதல். ஆகவே, அவரவர்களின் பாணியில் அவரவர்கள் நகைமுகம் துலங்கத் தோன்றினர்கள்!

ஒரு பக்கம் சாய்மானக் குறிச்சி. மறு புறம் தண்ணிர்ப் பானே. கீழ்ப்பகுதியில் பெரிய புத்தக அலமாறி. - சுற்றிச் சுற்றிப் பார்த்தார் அவர். காலேஜ் படிப்பின் போது எடுத்த நிழற்படம் ஒன்று காணப்பட்டது. டை” கட்டியிருந்த அவரது உருவத்தைப் பார்த்ததும் அவருக்கு குறுஞ்சிரிப்பு குறுக்கோடியது. மனிதர்கள் மாறுகிரு.ர்கள்; , ஆனல் நிழல்கள் மாற முடியாது உறுவம் மாறுகிறது; ஆல்ை, உள்ளமும் ஏனே, எப்படியோ மாறித்தான் தீர்கிறது! தீர்வுபெற வாய்க்காத நியதிகளுள் இதுவும் ஒன்றாே?...

அறைத் தோழர் நித்தியானந்தம் வந்தார். பழகுவதற்கு ஏற்ற உயர்ந்த மனிதர். அடுத்த அறை நண்பர்கள் தாஸ், சுந்தர்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் வந்தார்கள். நடந்து