பக்கம்:ஏலக்காய்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

நோய் நுண்மங்கள்தாம் இந்நோய்க்குத் தாய் தந்தையர். இலைகளைத் தொடர்ந்து, பூச்சரங்களும், பின்னே வித்துறைகளும் பாதிக்கப்படும்; நோய்க்குப் பலியான தோட்டம், தீக்கு இரையான மாதிரி கருகிவிடவும் நேரும்.

மாமூலாகப் பயன்படுத்தும் தடுப்பு மருந்துகள்தான் இந்நோய்க்கும் தீர்வு சொல்லும். மேலும், ஏலத் தோட்டங்களில் தேவையான நிழல் கிடைக்க செயல் ரீதியில் வழிசெய்தாலே போதும்; நல்ல வழி பிறந்துவிடும்!


இலைக்கொப்புள நோய்!

கடைசியாக, இலைக்கொப்புள நோய் என்று ஒரு நோயும் ஏலக்காயைத் தாக்கவல்லது. இது புதிதான நோய்; சமீபத்தில்தான் அறிமுகம் ஆனது. இந்நோய் பரவினால், இலைகளின் புறப்பகுதிகளில் கொப்புளங்கள் தோன்றும். இலைகள் உருமாறும்; பின் அழுகும், ஈரப் பதம் கூடினால், நோய்த் தாக்குதல் கூடும், 'போர்டோ' கலவைதான் (Bordeawy Mixture) இந்நோயையும் தடுத்துக் கட்டுப்படுத்தி அடக்கும்.

ஏலச் சாகுபடியைச் சீரழித்துச் சோதிக்கும் பயங்கரமான நச்சு நோய்ப் பூச்சி புழுக்கள் மற்றும் தொற்றுநோய்களைப் பொறுத்தமட்டிலே, வருமுன் காப்பதும் வந்தபின் காப்பதும் இன்றியமையாத நடைமுறைச் செயற்பணிகளாகவே அமைய வேண்டும்!


ஏலக்காயின் தோழர்கள் தேனீக்கள்!

ஏலக்காய்ச் செடி தன்னைச் சுற்றிலும் நுணுக்கமான வேறுபாடுகள் அல்லது, மாறுபாடுகள் ஏற்பட்டாலுங்கூட, அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்படும் இயல்பைக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/57&oldid=505967" இலிருந்து மீள்விக்கப்பட்டது