16
அமுதவல்லி
‘அம்மா!’ என்ற அழைப்பு மீளவும் பலத்த குரலில் எழவே, கிழவி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கண்களைக் கைகளால் கசக்கி விட்டுக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். "ஆமா' நீங்க யாரு?. எம் பொண்னு பயாஸ் கோப் கம்பெனிக்குப் பறிஞ்சிருச்சே?..." என்று கிழவி தடுமாறினாள்.
"அம்மா!,. என்னைப் புரியலையா அம்மா?"
"ஆத்தாடியோ!... எம் மவ காத்தாயி!..."
"அம்மா ஊஷ்!. பார்த்தீங்களா, அதுக்குள்ளே என்பாடத்தை மறந்திட்டீங்களே?...
"கோவிச்சுக்கிடாதேம்மா! எம் பொண்ணு அமுதவல்லி!..."
'ஊஸ்!...அமுதவல்லி!...'
"சரி!...சரி!..."
வான் வழி நடந்து வையகம் தொட்ட தேவ கன்னிகையென மின்னினாள் அமுதவல்லி, உதட்டிலே சாயம்; முத்திரையிலே அரிதாரச் சுமை; நெற்றித் திலகம் வரிக்கோடுகள்: இடையில் ஒளிர்ந்த சுட்டி: துடி இடை மார்புக் கச்சை, கனவுகளுக்கு "மகசூல்" நடத்தும் கண் இணை, படப்பிடிப்பு நிலையத்திலிருந்து, மதிய உணவுக்கு வந்திருந்தாள் அமுத வல்லி, போடப்பட்ட வேடத்தைக் கலைக்காமல்!
'அம்மா, பட்டு மெத்தையிலே படுக்காம் எம்மா இப்பிடித் தரையிலே படுக்கிறீங்க?"