பக்கம்:ஈட்டி முனை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

27 துக்கு மனிதன் என்ற முறையில் செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்த துரோகி அவன். இன்று மக்கட்குலம் முன்னேற்றப் பாதையிலே தளர் நடை போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழி னம் ஆர்வமாக முன்னேறத் தவித்து நிற்கிறது. தலைநிமிர்ந்து முன்செல்ல அவர்களுக்கு உற்சாகம் தேவை. அவர்களுக்கு தன்னம்பிக்கை இன்ஜெக் ஷன் தேவை. வாழப்பிறந்தோம் என்று ஊக்கு விக்க வேண்டியது அவசியம், இவற்றைச் செய்ய, வேண்டியவன் இலக்கியாசிரியன், வாழ்க்கைப் பாதையிலே இன்னல்கள் மண்டிக் கிடக்கின்றன. சிறுமை க ள் பெருத்துவிட்டன. சூழ்ச்சிகள் பதுங்கியுள்ளன. அறியாமை கனத்துக் கவிந்திருக்கிறது. அர்த்தமற்ற பயமும் மூடநம்பிக்கை களும் மல்கியுள்ளன. இவற்றை நீக்கி அறிவொளி பரப்ப வேண்டியது இலக்கியம், சிந்தனே விருந்து அளிக்க வேண்டியவன் இலக்கியாசிரியன். எழுத்தாளர்களாகிவி டுவது யாவர்க்கும் எளிது, எழுத்துத் திறமையை இலக்கியமாக்க பண்பு பெற வேண்டும், குன்றாத ஆர்வமும், குறையாத தன் னம்பிக்கையும், தளராத ஊக்கமும், சலியாத மனோ திடமும்-எல்லாவற்றுக்கும் மேலாக-சிறந்து லட்சிய மும் வேண்டும், இலக்கியாசிரியனுக்கு விழிப்புற்ற சமுதாயத்தின் எக்காளம் அவன் உரிமை உணர்வு பெ றுகின்ற மக்களின் இதயஒலி அவன். மக்களை செய லுக்குத் தூண்டுகின்ற வீர முரசும் அ வனே. உரிமைக் குரலே இடியாக, மக்களின் உணர்ச்சியை எரிமலை அக்னியாக மாற்ற வல்லவன் உண்மையான இலக்கியாசிரியன். அவர்களிடையே அன்பும் அமை தியும் ஆனந்தமும் பரப்புகிறவன் அவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/29&oldid=1369220" இலிருந்து மீள்விக்கப்பட்டது