பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு றும் விடுதலை பெறும்படி செய்வது உன் கடமை' என்று கேட்டுக் கொண்டாராம். வக்கீலுக்கு ஒன்றும் புரியவில்லை. வழக்கு நீதி மன்றத்தில் நடந்தது. எதிர்க்கட்சி வக்கீல், அவர்களே கொலை செய்தார்கள் என்பதை உறுதிப்படுத்தப் பலவிதமான சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினார். அதற்கு எதிராகத் தக்க சாட்சிகள், தெய்வ நம்பிக்கை உள்ள வக்கீலுக்குக் கிடைக்கவில்லை. அவர் மிகவும் கவலைப்பட்டார். ஆண்டவனைப் பிரார்த்திப்பது அவருடைய வழக்கம். ஆகையால் அவர், 'இறைவனே, இந்த நிரபராதி களைக் காப்பாற்றுவதற்குரிய வழியை எனக்கு காட்ட மாட் டாயா?" என்று பிரார்த்தித்துக் கொண்டார். வழக்கு முடிகிற தருணத்தில் இருந்தது. இன்னும் ஒருநாள்தான் வழக்கு நடக்க வேண்டும். அதற்குப் பிறகு வழக்கின் முடிவு கூறப்படும். ஆகவே அந்த வக்கீல் மிகவும் மனக் கலக்கத்துடன் ஆண்டவன் தான் வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். திருவிளையாடற் கதை இந்த நிகழ்ச்சியை நான் படித்தபோது பழைய கதை ஒன்று நினைவுக்கு வந்தது. பழங்காலத்தில் பாண்டியன் ஒருவன் ஒருவழக்கில் நீதி வழங்க முடியாமல் திண்டாடினான். அப்போது மதுரையில் உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் சென்று, 'எம் பெருமானே, இந்த வழக்கின் முடிவை நீதான் எனக்குத் தெளிவு படுத்த வேண்டும்' என்று பிரார்த்தித்துக் கொண்டானாம்; இந்தக் கதை திருவிளையாடல் புராணத்தில் வருகிறது. திருப்புத்துரில் இருந்து ஓர் அந்தணன் தன் மனைவி, குழந்தை ஆகிய இரு வரோடு மதுரைமாநகரை நோக்கி வந்து கொண்டிருந்தான். நடுவில் ஒரு காடு இருந்தது. அந்தப் பெண்மணிக்குத் தாகம் ஏற்பட்டமையினால் பருகுவதற்கு நீர் கொணர்வதற்காக அவன் சென்றான். அந்தப் பெண் தன்னுடைய குழந்தையோடு ஒர் ஆலமரத்தின் நிழலில் படுத்துக் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பெரிய பேய்க் காற்று வீசியது. மழையும் வரும் போல இருந்தது. அந்தக் காட்டிலே சுற்றிக் கொண்டிருந்த வேடன் ஒருவன் காற்று மழைக்காகச் சற்று ஒதுங்கலாம் என்று அந்த ஆலமரத்தின் மற்றொரு பக்கம் வந்து 47