பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 10: ஊரும் வரி.அரவம் ஒண்குறவர் மால்யானை பேர எறிந்த பெருமனியைக் - காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர் எம்மென்னும் மாலது இடம்.' 1. ஊரும்.திரியும்; வரி.கோடு; அரவம்-பாம்பு; ஒண்அழகிய, மால்.பெரிய; மணி-மாணிக்கம்; கார். மேகம்; எம்-எங்களுடையவன்; மாலது.எம்பெரு னுடையர் என்பது பொய்கையாழ்வார் சித்திரிக்கும் சொல் லோவியம், காட்சி-2 : புனங்களில் பட்டிமேயும் யானையைத் துரத்தும் குறவர்கள் ஒரு கையில் அம்பு தொடுக்கப் பெற்ற வில்லையும் மற்றொரு கையில் கொளுத்தின தீவட்டியையும் கொண்டு யானையை அதட்டிச் செல்லுகின்றனர். யானை வெருவியோடுங்கால், விண்ணினின்றும் விழும் மீன் தானாக அதன் வழியில் பேரொளியுடன் விழுவதைக் கண்டு அதனைக் குறவர்களின் கைத்தீவட்டி என மயங்கி மேல் செல்லாது அப்படியே திகைத்து நின்று விடுகின்றது. பெருவில் பகழிக் குறவர்கைச் செக்தி வெருவிப் புனந்துறந்த வேழம்-இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர் கோன்வீழக் கண்டுகந்தான் குன்று.* பகழி-அம்பு. செந்தீ=தீவட்டி; புனம்.கொல்லை; வேழம்-யானை, விசும்பு.ஆகாயம்; மீன்-நட்சத்திரம்: மேல்.முன் ஒரு காலத்தில்; அசுரர் கோன்-இரணியன்; உகந்தான்.மகிழ்ந்தான்; குன்று-திருமலை.! என்பது பொய்கையாழ்வாரின் சொல்லோவியம். 18. முதல். திருவந். 38 19. முதல். திருவந்.40.