152
சாயங்கால மேகங்கள்
கடையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு திருப்பத்தில் குறுக்கே நடப்பதற்கான ஸிக்னல் கிடைத்து விட்டதை நம்பி அவள் அவசரமாகக் கிராஸ் செய்ய முற்பட்டபோது ஸிக்னலையே லட்சியம் செய்யாமல் பாய்ந்து வந்த ஒரு பல்லவன் பஸ், அவளை மோதி வீழ்த்தி விட இருந்தது. மின் வெட்டும் நேரத்தில் பூமி அவளைப் பின்னுக்கு இழுத்துக் காப்பாற்றினான்.
அவனது அந்த வலிமை வாய்ந்த கரம் அவளைத் தீண்டிய போது அவளுக்கு மெய்சிலிர்த்தது. உள்ளே இனம் புரியாத மகிழ்ச்சிகள் அரும்பின.
“பெண் விடுதலைக்குப் பாடிய மகாகவியின் பேரில் பெண்களைக் காக்க சபதம் எடுத்திருப்பதாக கூறிய மறுகணமே இப்படி என் அருகிலுள்ள ஒரு பெண்ணே அபாயத்துக்கு ஆளாகலாமா?”
“நீங்கள் அருகிலிருந்தால் எந்த அபாயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.”
அவளும் புன்னகையோடு. பதில் கூறினாள், பூமி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவளது அந்தப் புன்னகை அவன் மனத்தின் ஆழத்தில் பதிந்தது.
இரண்டு முரடர்களின் தாக்குதலுக்குப் பயந்து காதலியை விட்டு விட்டு ஓடி விடுகிற காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்தால் அதில் யுத்த காண்டமே இருக்காது.
பதற்றத்தோடு சித்ரா பூமியிடம் அப்பொது கூறினாள் :