உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சாயங்கால மேகங்கள்

நல்லது கெட்டது தெரிந்தது, நல்லதை விரும்பினான். கெட்டதை வெறுத்தான்; எதிர்த்தான்.

நல்லதை விரும்பி ஆதரிக்கவும் துப்பில்லாமல் தீயதை எதிர்த்து வெறுக்கவும். துப்பில்லாமல் இன்றைய இளைஞர்களில் பலர் எதிலும் பிடிப்பின்றித் திரிசங்குகளாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். பூமி அப்படி இல்லை என்பதாலேயே அவளைக் கவர்ந்தான். அவனுடைய உடல் வலிமையும் அவளுக்குப் பிடித்திருந்தது. மனவலிமையும் அவளுக்குப் பிடித்தது. அன்றிரவு அவனைப் பற்றிய வியப்புக் கலந்த நினைவுகளுடனேயே உறங்கிப் போனாள் அவள்.

மறு நாள் அதிகாலையில் தினசரியைப் பார்த்தபோது அவளுக்குத் திகைப்பும் பதற்றமும் ஏற்பட்டன. முதல் நாளிரவு சண்டையெல்லாம் முடிந்து பூமி தன்னை ஆட்டோவில் பாலாஜி நகரில் திரும்பக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் பின் வீடு திரும்பியது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.

ஆனால் அந்தக் காலத் தினசரியில் வெளியாகியிருந்த செய்தியோ வேறுவிதமாகக் கூறியது. மைலாப்பூர் லஸ் பகுதியில் ஒரு ஹோட்டல் வாயிலில் ஆட்டோ -டாக்ஸி டிரைவர்களுக்கும் வசூலுக்காக வந்த ஓர் அரசியல் கட்சி ஆட்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் ‘பூமிநாதன்’ என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி கூறியது.

ஒரு வேளை பூமி தன்னை இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பியதும் போலீஸார் தேடிச்சென்று அவனைக் கைது செய்து கொண்டு போயிருப்பார்களோ என்று எண்ணினாள் அவள். அரசியல் கட்சி ஆட்கள் வந்து புகார் செய்ததின் பேரில் போலீஸார் வீடு தேடிச் சென்று நள்ளிரவில் கதவைத்தட்டி எழுப்பிக் கூடப் பூமியைக் கைது செய்து அழைத்துக்கொண்டு போயிருக்க முடியும் என்று சித்ராவுக்குத் தோன்றியது.

அவளுக்குப் பதற்றமும் துயரமும் மனத்தில் ஏற்பட்டன. வேதனை கவ்வியது. தனக்கு மிகவும் வேண்டிய மிகவும் நெருங்-