186
சாயங்கால மேகங்கள்
மறுமொழி கூறினார். பூமியும் சித்ராவைப் பார்த்துப் பொருள் நயம் பொதிந்த புன்னகை புரிந்தான்.
அங்கே வந்திருந்த கராத்தே நண்பர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தினான். பூமி. சிங்கப்பூரில் நண்பர்கள் பூமியைப் பற்றிச் சிறப்பாக கூறியதை எல்லாம் அவர் பூமியிடம் விவரித்தார். அவரை அவர் தங்க ஏற்பாடாகி இருந்த ஹோட்டலில் கொண்டு போய் விட்டு விட்டுத் மெஸ்ஸுக்குத் திரும்பினார்கள் பூமியும் சித்ராவும்.
அவன் மெஸ்ஸுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே முத்தக்காள் எதிர்பாராத விதமாக அவனிடம் வந்து சத்தம் போட்டுச் சண்டை பிடிக்கத் தொடங்கினாள்.
வறுமை உள்ளவர்கள் செய்யும் திருட்டுக்களைவிட வலிமையும், வசதியும் உள்ளவர்கள் செய்யும் திருட்டுக்களே இங்கு அதிகமாக நிகழுகின்றன.
ஜப்பானிய கராத்தே வீரர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பூமியும், சித்ராவும் மெஸ்ஸுக்குத் திரும்பிய போது இரவு அகாலமாகியிருந்தது. முத்தக்காள் அவர்களை எதிர் கொண்டு கூப்பாடு போட்டதிலிருந்து அன்று முன்னிரவில் பூமி இல்லாத வேளையில் அங்கு ஓர் அசம்பாவிதம் நடந்திருப்பது புரிந்தது. பூமியும், சித்ராவும் அன்று அங்கே இருக்க மாட்டார் ள் என்று. தெரிந்தே அது செய்யப்பட்டிருப்பது போலும் தோன்றியது.
அன்று முன்னிரவு எட்டு எட்டரை மணி சுமாருக்கு ஏற்பட்ட ஒரு மின்சாரத் தடங்கலினால் சுமார் அரைமணி நேரத்-