சாயஙகால மேகங்கள்
187
துக்கு மேல் லஸ் பகுதியில் இருள் சூழ்ந்திருந்த சமயத்தில் முத்தக்காள் கவனத்தையும் மீறி கேஷ் டேபிளில் இருந்து சுமார் இரண்டாயிரம் ரூபாயும் சில்லறையும் திருட்டுப் போயிருந்தது.
திடீரென்று இருண்டு போனதால், அம்மாதிரி நெருக்கடி வேளைகளில் பயன்படுத்துவதற்கென்று ஸ்டோர் ரூமில் வாங்கி அடுக்கியிருந்த மெழுகுவர்த்திக் கட்டுக்களை எடுத்து வருவதற்காக முத்தக்காள் உள்ளே போய் விட்டுத் திரும்புகிற சில நிமிஷங்களில் இது நடந்து விட்டது. திருடியே பழகிய வெளி ஆள் வந்து நடத்திய திருட்டா அல்லது உள்ளேயே இருக்கிற ஆட்களில் யாராவது ஒருவரின் வேலையா என்பது புரியவில்லை. முத்தக்காள் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டு அதை இன்னும் குழப்பிக் கொண்டிருந்தாள்.
“நீ போனதால் தானே இத்தனை கந்தர் கோளம் எல்லாம்? நீ பாட்டுக்கு அடிக்கடி கராத்தே, குஸ்தி, சண்டையின்னு போயிட்டா, நா ஒண்டிக் கட்டையா என்ன பண்ணுவேன் சொல்லு?” என்று பணத்தைப் பறி கொடுத்த ஆதங்கத்தில் பூமியிடம் எரிந்து விழுந்தாள் முத்தக்காள்.
“பதற்றப்படாமல் நடந்ததைச் சொல்லுங்கள்” என்று நிதானமாக விசாரித்தான் பூமி.
முத்தக்காளின் உணர்ச்சி வசப்பட்ட பதற்றம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பதற்றம் காரியத்தைக் கெடுத்து விடும் என்று எண்ணினான் அவன். படிப்பில்லாத நாட்டுப்புறத்து மத்திய தர வயது விதவை எப்படிப் பரபரப்பாக நடந்து கொள்வாளோ அப்படித்தான் முத்தக்காளும் நடந்து கொண்டாள்.
தொடர்ந்து முன்னிரவு வேளையில் மின்சாரத் தட்டங்கல் வருவதைக் கவனித்துக் கொண்டிருந்து திட்டமிட்டு இந்தத் திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்று சித்ரா பூமியிடம் கூறினாள். பூமிக்கும் அவ்வாறே தோன்றியது. பழைய அனுபவம்