சாயங்கால மேகங்கள்
181
"ஒரு பெரிய நகரம் படித்த நடுத்தர வர்க்கத்தை எவ்வளவிற்குப் படுகோழைகள் ஆக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா? பத்துப் பேர் வந்து கையில் பிளேடுகளுடன் மிரட்டினால் இங்கே பத்து லட்சம் பேர் பயந்து ஓடிவிடுவார்கள். போலிருக்கிறதே?” என்று சித்ராவின் பக்கம் திரும்பிக் கேட்டான் பூமி, சித்ரா அதற்கு மறுமொழி ஏதும் கூறவில்லை.
ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகு வைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பல பட்டிணத்தில் நிறையவே இருந்தன.
பூமியே மேலும் தொடர்ந்து சொன்னான்:
“பயத்துக்கு அடிப்படை சுய நலம். சுய நலமுள்ள ஒவ்வொருவனும், எதற்கும் பயந்து தானாகவேண்டும்.”
“அப்படியானால் இந்த நகரத்தினுள், முரடர்கள் ரெளடிகள், பயமே இல்லாத காலிகள் எல்லாருமே சுயநலமற்றவர்கள் என்று அர்த்தமா?”
“அவர்கள் முரடர்கள். முரடர்களைச் சுயநலமற்றவர்கள் என்று சொல்ல முடியாது. கையாலாகாதவர்கள் தங்களைப் பொறுமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் நகரம் இது.”
“இங்கே விரோதித்துக் கொள்ள வேண்டியவர்களைக் கூட விரோதித்துக் கொள்ள அஞ்சித் தயங்குகிறார்கள."
சா-12