உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

215

கெஞ்சாத குறையாக மன்னிப்புக் கேட்பது போன்ற தொனியில் புலம்ப ஆரம்பித்தான்.

“அதெல்லாம் இருக்கட்டும் பயப்படாதே; உன்னை நான் ஒன்றும் செய்து. விடமாட்டேன். இப்போது உன்னைப் பழி வாங்குவதற்கு நான் வரவில்லை” என்று பூமி கூறிய பதில் அவனைச் சிறிது ஆறுதல் அடையச் செய்தது.

ஆனால் பயமும் பதற்றமும் முழுதும் தணியாத நிலையிலேயே பூமியின் பிடியில் இருந்தான் மணி.

“உள்ளே இருந்தபடியே இல்லை என்று துணிந்து பொய் சொல்ற வேலையைப் பெரிய மனிதர்களும் வசதி உள்ளவர்களுமே செய்வார்கள். அல்லது திருடர்களும் சமூக விரோதிகளும் செய்வார்கள். இதில் நீ எந்த வகை மணி?” என்று சிரித்தபடியே பூமி கிண்டலாகக் கேட்ட போது கூட மணிக்கு உள்ளூற நடுக்கமாகத்தான் இருந்தது. அவனது பதில் குரலிலேயே அது தெரிந்தது.

“மன்னிச்சிடுங்க அண்ணே! உங்களுக்கு நான் தீம்பு நெனைப்பேனா?”

அப்போது அவனிடமிருந்து தனக்குத் தெரிய வேண்டிய தகவல்களை அங்கேயே விசாரித்து விடாமல் மெல்லப் பேச்சுக் கொடுத்தபடியே அவனைக் கச்சேரி ரோடு வரை உடன் அழைத்துச் சென்றான் பூமி.

‘வழிமறித்துத் தாக்க முயன்ற கூலிப் பட்டாளத்தின் எஜமானர்கள் யார், அவர்கள் கடத்திச் சென்ற பையனை எங்கே வைத்திருக்கூடும்’ என்பதைப் பற்றிப் பூமிக்கு அனுமானங்களும் உத்தேசங்களும் இருந்தாலும் அதை வெளியே நிர்ணயமாகக் காட்டிக்கொள்ளாமல். மெதுவாக மணியிடம் தகவலறிய முயன்றான் அவன்.

அது அவ்வளவு சுலபமான வேலையாயில்லை. அன்று மாலை வரை ஆட்டோ டிரைவர் மணியுடன் பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. மெஸ்ஸில் சித்ராவை