பக்கம்:புத்த ஞாயிறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புத்த ஞாயிறு

முதிய. பி. இக்தனை ஆண்டுக்காலம் சோதனைகளைத் தாங்கிப் பொறுமையாக இருந்தவர்-காரியம் கைகூடுகிற காலத் தில் பொறுமை இழந்துவிடக் கூடாது. கவனம். மறுபடி நகரில் போய்ப் பார்க்க வேண்டும் நீங்கள்! இளம். பி. இந்திரவிழாவில்ை பரபரப்பும் கோலாகலமுமாக இருக்கும் நகரில் சென்ருல் - இதுவரை கிடைத்த அநுபவங்களுக்குச் சிகரங்கள் போன்ற அநுபவங்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனல் சலிப்படையாது இன்னும் தாங்கள் இட்ட கட்டளையை நான் சிரமேற் கொள்ளுகிறேன். உடனே சென்று காண்கிறேன். முதிய பி: வெற்றிகரமாகப் போய் வாருங்கள். போதி மாதவன் கருணையினல் உங்கள் வாழ்வில் புத்த ஞாயிறு உதயமாகட்டும் என வாழ்த்துகிறேன்.

இளம். பி: வணங்குகிறேன். விடை தாருங்கள். முதிய. பி. மங்கலமே விளைக கருணை பெருகுக!

(திரை)

காட்சி-8 இடம்:-இந்திரவிழா நடக்கும் பகுதி

(விழாப் பரபரப்பு-பலவகையான வாத்தியங்களின் கலப்பு ஒலிகள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி யிருக்கும் கூட்டத்தின் பேச்சுக்குரல்கள் - சந்தடி, இந்திரவிழாக் கூட்டம். நான் இதற்கு முன் எந்த இந்திர விழாவின்போதும் இவ்வளவு கூட்டத்தைக் கண்டதில்லை' - என்று இடையிடையே மக்கள் ஒரு வருக்கொருவர் கூறிக்கொள்ளும் ஒலிகள் - இதனி டையே பிட்சு நாளங்காடிக்கு வருகிரு.ர். சமயவாதி கள் ஒருவருக்கொருவர் பலத்த குரல்களில் வாதிட்டுக் கொண்டிருக்கிரு.ர்கள். கூட்டத்தில் ஓரிடத்தில் நாடோடிப் பாணர்கள் இந்திரவிழாவையும் சோழர் தலைநகரையும், புகழ்ந்து பாடுகிருர்கள்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/34&oldid=597397" இலிருந்து மீள்விக்கப்பட்டது