இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
65
முப்பத்து மூன்றடி | குடிப் பெருமை உண்டாகும் |
முப்பத்து நான்கடி | வீட்டை வீட்டு ஓட நேரும் |
முப்பத்தைந்தடி | பலவகைச் செல்வமும் உண்டாகும் |
முப்பத்தாறடி | அரச போக வாழ்க்கை |
முப்பத்தேழடி | இன்பமும் இலாபமும் உண்டாகும் |
முப்பத்தெட்டடி | வீட்டில் பேய் பிசாசுகள் குடி இருக்கும் |
முப்பத்தொன்பதடி | இன்பமும் சுகமும் உண்டாகும் |
நாற்பதடி | சலிப்பும் சோர்வும் உண்டாகும் |
நாற்பத்தோரடி | குபேர வாழ்வு பெறுவர் |
நாற்பத்திரண்டடி | எல்லாச் செல்வமும் நிலை பெறும் |
நாற்பத்து மூன்றடி | சிறப்பு கெடும்-தீமையுண்டாகும் |
நாற்பத்து நான்கடி | கண்பார்வை அழியும் |
வேறு சிலநூல்களில் 100அடி 108 அடி வரை பலன்கள் கூறப்பட்டுள்ளன.
மனை அமைப்பும் அறைகளும்
வீட்டின் அறைகள், கூடங்கள், வாயில் முதலானவற்றிற்கும் அடி அளவுப்பொருத்தம், நற்பயன், தீயபயன் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன. 49
மனையின் தெற்குத் திசையில் குப்பை கொட்டவும், தென்மேற்குத் திசையில்-தென்மேற்கு எல்லையில் வைக்கோல் போர் வைக்கவும், மேற்குத் திசையில் எருமை முதலிய கால்நடைகளைக் கட்டும் கொட்டகை ஏற்படுத்தவும், வடமேற்குத் திசையில் நவதானியங்களை ஆண்டு