பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் எட்டு

முப்பெரு நகரங்கள்

காவிரிப் பூம்பட்டினம் சோழர் தலைநகரம் என்ற முறையிலும், மதுரை பாண்டியர் தலைநகரம் என்ற முறையிலும் இதுகாறும் ஆராயப்பட்டன. இனி, பல்லவர் தலைநகரமாக இருந்த காஞ்சியும், முந்திய சோழர் தலைநகராயிருந்த உறையூரும், சேரர் தலைநகராயிருந்துள்ள வஞ்சியும், இந்த இயலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மதுரை நகரமைப்பைக் கூறும் பரிபாடல் இறுதியில் 'கோழியும் வஞ்சியும் போல்’ என உறையூரையும் வஞ்சி யையும் சுட்டுகிறது.1

மேற்குறித்த கோநகரங்களில் இன்றும் பெருநகரங்களாக இலங்குபவை மதுரையும், காஞ்சியுமே. உறையூர் திருச்சியருகே ஒரு சுற்றுப்புறச் சிற்றூராக மட்டுமே விளங்குகிறது. எது வஞ்சி என்பது பற்றிக் கருத்து வேறுபாடு நிலவுகிறது.2

நூற்குறிப்புகளிலும், சான்றுகளைக் கொண்டுமே ஆராய முடிந்த இந்நகரங்களைக் காஞ்சி, உறையூர், வஞ்சி என இங்கு முறை வகுத்துக் கொள்ள 'இதுவே' காரணம்.

காஞ்சி நகரமைப்பு

தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூலில் உருவக அணியின் பிரிவு ஒன்றிற்கு மேற்கோளாகக்