பக்கம்:இன்ப வாழ்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இன்ப வாழ்வு


மற்றும், சிவன் மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடிய சிவப்பிரகாச முனிவர், திருமாலின்மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடிய பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் முதலியோர் படைத்துள்ள கோவை, கலம்பகம், அந்தாதி, தூது, உலா, மாலை முதலிய பல்வகைப் படைப்புக்களிலும் தாராளமாகஏராளமாகக் காதல்துறை கலந்துள்ளது. மேற்கூறிய சமயப் பெரியோர்கள் எல்லாரும், கடவுளைக் காதலனாகவும் மக்களுயிரைக் காதலியாகவும் கற்பனை செய்து கொண்டு காதல் மழையைப் பொழி பொழி என்று பொழிந்து தள்ளிவிட்டார்கள்.

கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்ட கோவை, குறவஞ்சி, கலம்பகம், தூது, உலா, அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களில் காதல் சுவை அருவியாகப் பொங்கிப் பெருக்கெடுத்தோடும்படிச் செய்திருப்பது சிந்தனைக்குரியதன்றோ? யார்மேல் பாடப் பட்டிருப்பினும் கோவை நூற்கள் அத்தனையும் இன்ப இலக்கியமே. பரணி நூற்களிலுள்ள 'கடை திறப்பு' என்னும் பகுதியை ஒரு "கொக்கோகம்" என்று கூடக் கூறிவிடலாம். ஏன்தான் இப்படி எழுதினார்களோ!

முற்கால - இடைக்கால இலக்கியங்கள் மட்டுந் தாமா இப்படி? பிற்காலம் எனப்படும் பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியப் படைப்புக் களும் முன்னவற்றிற்கு இளைத்தவையல்ல. இக் காலத்தைச் சேர்ந்த பாரதியார், பாரதிதாசன் முதலிய மறுமலர்ச்சிக் கவிஞர்களும் தம் படைப்புக்களில் இன்பத் துறையை மறந்தாரிலர். செய்தித்தாள் காலம் (யுகம்) ஆகிய இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/21&oldid=514717" இலிருந்து மீள்விக்கப்பட்டது