பக்கம்:வேட்டை நாய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணத்தின் மகிமை

53


விட்டார்கள். வெறுத்துத் துரத்த ஆரம்பித்தார்கள். “சேச்சே, போ, போ! உனக்கு வேறு வேலை இல்லை. இனிமேல் இந்தப் பக்கம் தலைகாட்டவே கூடாது. தினசரி உனக்கு அள்ளிக் கொடுக்க, இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது? உனக்கு உறவினர் ஒருவர் கூட இல்லையா? அவர்களிடத்திலே போய் உன் கஷ்டத்தைச் சொல்லேன்” என்று எரிந்து விழுந்தார்கள்.

பாத்திமாவுக்கு அன்று வரும்படி கிடையாது. தலை குனிந்தபடியே வீடு திரும்பினாள். அன்று இரவு ஹாஸனிடத்திலே நடந்ததைச் சொன்னாள்.

ஹாஸன் அவள் கூறியதைக் கவனமாகக் கேட்டான். பிறகு, “சரி, அதற்காக என்ன? அவர்கள் நம் உறவினர் வீட்டுக்குத்தானே போகச் சொன்னார்கள்? அதுவும் நல்ல யோசனைதான். நாளையிலிருந்து நீ என்ன செய்யவேண்டும், தெரியுமா? நம் உறவினர்கள் ஒவ்வொருவரையும் போய்ப் பார்த்து, நான் சிறையில் இருப்பதாகக் கூற வேண்டும். என்னை மீட்பதற்குப் பண உதவி வேண்டும் என்று கெஞ்ச வேண்டும். அவர்கள் பணம் தருவார்கள். அந்தப் பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து வீடு சேர்க்க வேண்டும். எப்படி என் யோசனை?” என்றான்.

உடனே, பாத்திமாவின் முகத்திலே மகிழ்ச்சி தாண்டவமாடியது. “சரி, நாளையே போகிறேன்.” என்றாள்.

மறு நாள் முதல், ஒவ்வொரு உறவினர் வீடாகச் சென்று ஹாஸன் சொல்லிக் கொடுத்தது போல் சொன்னாள். அவர்களும் அவளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/55&oldid=502592" இலிருந்து மீள்விக்கப்பட்டது