இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
227
- பாட்டு
- வணக்கம் வணக்கம் ஐயா, அம்மா உங்க அபயம்!
- அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்தச் சமயம்!
- (வண)
- வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு!
- வாட்டுகின்ற பசிப்பிணி துயரிருக்கு!
- வாழுவது உங்க கையில் தானிருக்கு!
- (வண)
- பற்றிப் படர வந்த பசுங்கொடியைப்
- பந்தலே தள்ளுவதும் சரியா?
- பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப்
- பெரிதாய்க் கொள்ளுவதும் முறையா?
- (வண)
- (கெஜல்)
- அண்ட நிழல் தேடிவரும் நொண்டிகளை ஆலமரம்
- அடித்தே விரட்டுவதும் உண்டோ?
- வந்தவரை வாழ வைக்கும் வசதி படைத்தவங்க
- தண்டனைகள் தருவதும் நன்றோ?
- பாட்டு
- கண்ணிருக்கு உங்களுக்குக் கருத்திருக்கு!
- கையேந்தும் எங்கநிலை தெரிஞ்சிருக்கு!
- கடவுளும் நீங்க தான் எங்களுக்கு!
- (வண)
மாடப்புறா-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : P. சுசிலா