பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
226
சமாதானமே தேவை ...
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே
(சமாதான)


போட்டிப் பொறாமைகள் இல்லாத-ஒரு
புதிய சமுதாயம் உருவாக-புத்தர்
காட்டிய வழியில் நாம் போக-அவர்
கண்ட கனவுகள் நனவாக
(சமாதான)


கட்சி பேதங்கள் எதற்காக?-பல
கலகமும் பகையும் எதற்காக?
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்!
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்!
(சமாதான)
மருத நாட்டு வீரன்-1961
இசை : S. V. வெங்கட்ராமன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்