பக்கம்:மணிவாசகர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதனால் அப்பேற்றினைத் தவிர வேறு எப்பதவியிலும் தமக்குப் பற்றில்லை என்பதையும். "இரவும் பகலும் எழிலார் பாதப் போதாய்ந்துஅணைவ - தென்று கொலோ என் பொல்லாமணியைப் புணர்ந் தே' பாடிப்பாடிப் பணிந்து பாதப் பூப்போதணைவதென்று கொலோ என்பொல்லா மணியைப் புணர்ந்தே" என்பவற்றால் அப்பேறு எஞ்ஞான்று தமக்குக் கிட்டுமோ வென வருந்தியதையும், "உன்திரு மலர்ப்பாதம் அடைந்து கின்றிடுவான் ஆசைப் பட்டேன் கண்டாயம் மானே' என்பதனால் அத்திருவடிப் பேற்றில் தமக்குள்ள ஆசையையும், "தருககின் பாதம் போற்றி தமியனேன் தனிமைதீர்த்தே" ஆர்ந்த கின்பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி" என்பவற்றால் அப்பேற்றுக்கு ஆண்டவனைத் தாம் மன்றாடி இரந்து வேண்டினமையையும், "கின்தி ருவடிக்காம்பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்.புரம் பரனே" என்பதனால் இப்பிறவி அப்பேற்றினைப் பெறுந்தகுதி யுடைய தன்றேல் அடுத்த பிறவியாயினும் அதற்குரியதாகக் கொடுத்தருள வேண்டுமென்பதையும் விளக்கியருளினமை. காண்க. . இன்னும் அத்திருவடிக்குள்ள பேரருளை விளக்கு, மிடத்து, "வண்ணந்தானது காட்டி வடிவு காட்டி மலர்க்கழல்க ளவை காட்டி வழியற் றேனை திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்' 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/83&oldid=852826" இலிருந்து மீள்விக்கப்பட்டது