பக்கம்:மணிவாசகர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என வண்ணம், வடிவுகாட்டினும், மலர்ச்கழல்கள் காட்டிய பின்னரே தமது பிறப்புத் தொலைந்தது எனக் குறிப்பித் தருளினர். இங்கு வண்ணந்தானது.........கொண்டாய் என்பத னால், பேரொளி மயமாகிய இறைவன் வெளிப்பட்டுத் தன் அருட்டிருமேனியைக் காட்டிய உண்மையை அடிகள் கூறி யிருப்பதைச் சிறிது ஆராய்ந்து காண்போம். மக்களுடைய காட்சிக்கும், கடவுளின் காட்சிக்கும் பெரி தும் வேற்றுமையுண்டு. மக்கள் சேய்மையிற் காணப்பட்டால் முதலில் உருவமும் சிறிது நெருங்கியபின் உறுப்புக்களும் அண்மையில் வந்தபின் அவர்களின் செந்நிறமோ, அன்றிக் கருநிறமோ, அல்லது பொது நிறமோ, அதுவுங் காணப்படும். கடவுளின் காட்சி முன்னர் ஒளியும் பின் வடிவமும், அதன் பின் உறுப்புங் காணப்படும். அடிகள் உண்மையாகவே ஆண் .டவனைக் கண்டு களித்தவராகவின் அவ்வுண்மையை "வண்ணந்தானது காட்டி' என முதலில் ஒளியைக்கூறி, "வடிவுகாட்டி' எனப் பின் திருவுருவத்தைச் செப்பி, 'மலர்க் கழல்க ளவைகாட்டி' என இறுதியில் இறைவனருளுறுப்பும் தமக்கு இன்பமளித்ததுமாகிய பொன்னடியைப் புகன் றருளி னார். காலஞ்சென்ற பேரறிவாளர், கா. சுப்பிரமணிய பிள்ளையவர்களால் உரையெழுதப்பெற்று சைவ சித்தாந்த சமாஜத்தாரால் 1933ல் வெளியிடப்பெற்ற திருவாசகத்தில், அச்சமாஜத்தார்கள் வேண்டுகோளுக்கிணங்கி அந்த உரை மேல் தங்கள் கருத்தை எழுத உடன்பட்டு எழுதிய மூவருள் பான் ஒருவன். மற்றவர் காலஞ்சென்ற நாட்டாரவர்களும், பண்டிதமணியவர்களுமாவர்.அத்திருவாசக இறுதியில் அவர் :ளின் கருத்தை ஒரு அநுபந்தமாகவும் என் கருத்தைத் தனி அநுபந்தமாகவும், வெளியிட்டிருக்கிறார்கள். அதில் யான் எழுதிய இந்த உரை பிற்காலத்தில் தமது உரைபோலக் கதிர்மணி விளக்கஉரைகாரர் எழுதிக்கொண்டார். இவ்வாறு ஆண்டவன் அருள் வடிவத்தையும் அருட்கழலையும் தாங் & 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/84&oldid=852827" இலிருந்து மீள்விக்கப்பட்டது