10. 11. 12. 13. 14. 46 உத்திரப்பிரதேஸ், பீகார், வங்காளம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கையின் கிளையாறுகள் யாவை? ஜமுனா, கோமதி, கார்கா, சாரதா, கண்டக், சாம்பல், சான், கோசி. ஆறுகள் வளைந்து வளைந்து செல்வதேன்? குன்று, பாறை, மலை முதலிய தடைகள் இருப்பதால் இவ்வாறு செல்கின்றன. சமவெளியில் பெரும்பாலும் நேராகச் செல்லும். நிலத்திற்குக்கீழ் ஆறுகள் உள்ளனவா? உள்ளன. சுண்ணாம்புக்கல் உள்ள இடத்தில் உள்ளன. மழைநீர் இக்கல்லை அரித்துத் துளைகளையும் குகைகளையும் உண்டாக்குவது. ஒர் ஆறு மேற்பரப்பில் பாறைத் துளையில் சென்று, குன்று வழியாக நிலத்திற்குக் கீழ் ஒடவல்லது. பிரம்மபுத்ரா எங்கு உண்டாகிறது? கிழக்குத் திபேத்தில் உண்டாகிறது. இது கங்கையாற் றுடன் சேர்ந்து தன் நீரை வங்காள விரிகுடாவில் கலக்குமாறு செய்கிறது. இமயமலை வழியாக 1300 கி.மீ ஒடுவது. தக்கான ஆறுகள் யாவை? 1. கோதாவரி 2. கிருஷ்ணா 3. காவிரி 4. பெண்ணாறு 5. மகாநதி 6. தாமோதர் 7. ஷராவதி 8. நெட்ராவதி 9. பாம்பா 10. நர்மதா 11. தப்தி 12. பாரத புழா
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/48
Appearance