இரா. நடராசன்
191
மொழி பெயர்ப்பு உத்திகள்
இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகள் முழுவதும் மொழிபெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. ஆங்கிலக் கட்டுரையின் அளவிலேயே மொழிபெயர்ப்புக்கட்டுரையும் அமையவேண்டிய கட்டாயம் காரணமாக, மொழி பெயர்ப்பு சொற்செட்டோடும், பொருட்செறிவோடும், எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. மொழிப்பெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்களுக்கு ஏற்படாத வண்ணம், தமிழிலேயே மூலமாக எழுதப்பட்டது போன்று தரவேண்டியுள்ளது. இதற்காக மணவையார் வகுத்தளித்துள்ள புதிய உத்திகளைக் கையாண்டு கட்டுரைகளை மொழிப்பெயர்ப்பாளர்கள் தமிழாக்கம் செய்கிறார்கள். இவ்வாறு புதிய புதிய மொழிபெயர்ப்பு உத்திகளைக் கண்டறிந்து செயற்படுத்த ஏற்ற களமாக "கூரியர்" தமிழ் இதழ் விளங்குகிறது. 15 ஆம் நூற்றாண்டுக் கவிஞன் காளிதாசனின் ஒரு வருணனை கவிதை நயம் சொட்டச்சொட்ட இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
"காமக்கேளிக்கையினை விழையும் கரிய யானைகளைப்போல், சூல்கொண்ட கருமேகங்கள் திரண்டு எழுகின்றன. கொந்தளிக்கும் படைக்கடலிடையே வீறுகொண்ட அரசர்கள்போல் அவை பீடுநடை போடுகின்றன. மின்னல் தான் அவர்களின் கொடிகள்; இடி முழக்கமே போர் முரசொலி" (1989 ஏப்ரல் இதழ்)
இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு
"என் அண்ணன் பிறந்த கிராமத்தில் உழவர் பெருமக்கள் மழைவேண்டிப் பாட்டுப் பாடிக்கொண்டு புழுதி கிளம்பும் வீதிகளில் பெரிய கூடையினைத் தாங்கியவாறு