உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தமிழ் வளர்ச்சியில் கூரியர் பங்கு


ஊர்வலம் செல்வார்கள். அந்தக்கூடையில் வேப்பிலைகளுக்கு மத்தியில் பெரிய ஆண் தவளைகளைக் கட்டி வைத்திருப்பார்கள். "மழையே வருக!" என்று அவர்கள் எழுப்பும் முழக்கம் அமைதி தவழும் வெப்பக்காற்றில் கலந்து வானைப் பிளந்திடும். தகிக்கும் வெயிலில் காயும் குடிசைகளிலிருந்து குழந்தைகள் ஓடிவந்து தவளையின் மீது அரிய நீரைத் துளித்துளியாக ஊற்றுவார்கள். மாலையில் வானில் கருமேகங்கள் சூழும்; இடி முழங்கும்; மழை பொழியும்! (1982 ஏப்ரல் இதழ்)

இயல்பான நடையில் ஆற்றொழுக்கெனச் செல்லும் இந்த வாசகத்தை மொழிபெயர்ப்பு என்று கூறமுடியுமா? கவிதைகள்கூட மூலமொழிக் கருத்தினையும், உணர்வினையும் எந்த வகையிலும் சீர்குலைக்காமல் கவிதையழகு, யாப்பமைதி, சந்தநயம் அனைத்தும் மிளிர தமிழில் இறக்கப்படுகிறது.

நாடு திரும்பி நீ
வந்ததும் தோழனே!
பீடுயர் சுதந்திரக்
கொடியினை ஏற்றிடு
விடுதலை கீதம்
வீறுடன் பாடிடு!
தாய்க்குல உரிமைக்குத்
தளராது போரிடு!
பெரியநம் சமூகச்
சோதனைக்கூடத்தில்
சரிநிகர் சமான
நிலையினை நாட்டிடு!

(1989 ஆகஸ்ட் இதழ்)

பின்னாளில் பொதுவுடைமைச் சீனாவின் தலைமை அமைச்சராக விளங்கிய சூ-என்-லாய், தம் 22வது வயதில்