இரா. நடராசன்
193
(1920), ஃபிரான்சுக்குப் படிக்கச் சென்ற வகுப்புத் தோழனுக்கு எழுதிய கவிதைக் கடிதமே இது. இத்தகைய மொழி பெயர்ப்புகள் மூலம் தமிழ்மொழிக்கு ஆக்கம் சேர்க்கிறது "கூரியர்" இதழ்.
அறிவியல் உண்மைகள்
தமிழ்மொழியில் எல்லாக் கருத்துகளையும், எடுத்துச் சொல்ல முடியும் என்பதைக் "கூரியர்" இதழ் எடுத்துக்காட்டி வருகிறது. பல்வேறு அறிவியல் உண்மைகளையும், பண்பாட்டுக் கருத்துகளையும் தமிழ் மக்கள் பெறுவதற்கு தமிழ்க் "கூரியர்" இதழ் வாய்ப்பளித்து வருகிறது. இன்று சுற்றுப்புறச் சூழல் தூய்மைக்கேடு குறித்து உலகெங்கும் நிறையப் பேசுகின்றோம். இதுபற்றி இத்துணையளவு பேசுவது தேவைதானா என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கு அறிவியல் நோக்கில் இவ்வாறு பதிலளிக்கிறது "கூரியர்":
"அடுத்த 50 ஆண்டுகளில் உலக வெப்பநிலை உயர்வதால் பல தொடர் விளைவுகள் ஏற்படும். பசுமை இல்ல விளைவினால் மழைபொழியும் பாங்கில் திடீர் மாற்றம் உண்டாகும். சில இடர்களில் வறட்சி நிலவும். இதனால் தாவர வாழ்க்கை பாதிக்கப்படும். இதன் விளைவாகத் தீவனத்திற்குத் தாவரங்களை நம்பி வாழும் விலங்குகளும் பாதிப்புக்குள்ளாகும். தாவர வாழ்வில் ஏற்படும் மாற்றத்தினால் தட்வெப்பத்திலும் மாறுதல் ஏற்படும். உலகளாவிய வெப்ப அதிகரிப்பினால் சில பகுதிகளில் உணவுப்பயிர்கள் அழிந்துபடும்; மண் அரிமானம் அதிகமாகும். புதியசூழலில் நச்சுப்பூச்சிகளின் படையெடுப்பு மிகுதியாகும்'
(1989 டிசம்பர் இதழ்)
"எண்சான் உடம்புக்குச் சிரசே பிரதானம்" என்பர். ஏனெனில், சிரசில்தான் மனிதனின் மூளை இருக்கிறது.
13