உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


31. தோய்த்தல் என்றால் என்ன? இதன் நன்மை என்ன?

எஃகைப் பதப்படுத்தும் முறை. இதனால் கிடைக்கும் எஃகு அதிகக் கடினமில்லாததாகவும் உடையும் தன்மை இல்லாததாகவும் இருக்கும்.

32. சல்போனிகக் காடியாக்கல் என்றால் என்ன?

ஒரு கரிமப் பொருளில் சல்போனிகக் காடித் தொகுதியைச் சேர்த்தல்.

33. கட்டுப்படுத்தி ஆற்றுதல் என்றால் என்ன?

வெப்பப்படுத்தும் முறைகளில் ஒன்று. எஃகினைச் செஞ்சூடேற்றிப் பின்னர்க் குளிரச் செய்ய அது மென்மையாகும்.

34. உருக்கிப் பகுத்தல் என்றால் என்ன?

தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிப்பதற்குமுன் அவற்றைத் தூய்மையாக்கும் முறை.

35. நீர்மமாக்கல் என்றால் என்ன?

ஒரு பொருளை நீர்மநிலைக்கு மாற்றுதல். லிண்டே முறையில் வளி நீர்மமாகும்.

36. சல்பேட்டாக்கல் என்றால் என்ன?

சல்பைடை ஆக்சிஜன் ஏற்றம் செய்வதன் மூலம் ஒரு கூட்டுப் பொருளைச் சல்பேட்டாக்குதல்.

37. வன்கந்தமாக்கல் என்றால் என்ன?

ரப்பரின் பண்பை உயர்த்தும் முறை, இதில் கந்தகத்துடன் ரப்பர் சேர்த்துச் சூடாக்கப்படும்.

38. இம் முறையைத் தற்செயலாகக் கண்டறிந்தவர் யார்?

1829இல் சார்லஸ் குட் இயர் என்பார் கண்டறிந்தார்.

39. வன்கந்த ஆற்றல் என்றால் என்ன?

அதிகம் வெடிக்கும் கலவை. இதில் சோடியம் நைட்ரேட்டு நைட்ரோகிளசரின் வீட்டுக்கரி கந்தகம் ஆகியவை சேர்ந்திருக்கும்.

40. வெற்றிட உலோகப் படிய வைப்பு என்றால் என்ன?

பூகம் உலோகத்தை முதலில் ஆவியாக்கி அந்த ஆவியை மட்ட உலோகத்தின் மீது செலுத்திக் குளிரவைக்கும் பொழுது பூசும் உலோகம் மெல்லிய படலமாக