உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


103. நைலாந்தர் வினையாக்கி என்றால் என்ன?
பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட்டு, பொட்டாசியம் அய்டிராக்சைடு, பிஸ்மத் துணை நைட்ரேட் ஆகியவை கரைந்த கரைசல், சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுவது.

104. நடுநிலையாக்கி என்றால் என்ன?
காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட்

105. சவக்கிடங்கு என்பது யாது?
மருத்துவமனையில் இறந்த உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்.

106. மருத்துவமனை என்றால் என்ன?
நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தும் அறுவை செய்தும் நோய்களைப் போக்கும் இடம், இது பொது மருத்துவமனை (அரசு சார்ந்தது), தனியார் மருத்துவமனை என இரு வகை.

107. உயிரின் அடிப்படை அலகும் வேலையலகும் எது?
கண்ணறை (செல்)

108. சிறுநீரகத்தின் அடிப்படையலகும் வேலையலகும் எது?
சிறுநீர்ப்பிரித்தி.

109. நரம்பு மண்டலத்தின் அடிப்படையலகும் வேலையலகும் எது?
நரம்பணு அல்லது நரம்பன்.

110. வளர் தூண்டிகளுக்கும் (ஆர்மோன்கள் வளர்ப்பிகளுகம் (ஆக்சின்கள் உள்ள வேறுபாடு யாது?

முன்னவை நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப்படுபவை. பின்னவை தாவரங்களால் சுரக்கப்படுபவை.