உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

aging: (உலோ.) முதிர்ச்சி: இயற்க்கை வெப்பம், குளிர்ச்சி காரணமாகச் சில உலோகங்களில் அல்லது உலோகக் கலவைகளில் காலப் போக்கில் ஏற்படும் மாறுபாடு

aging of incandescent lamp: (மின்.) வெண்சுடர் விளக்குத் தளர்ச்சி: வெண்சுடர் விளக்கிலுள்ள இழையும் விளக்குக்குமிழின் உட்புறமுள்ள பூச்சும் உயிரக இணைவு காரணமாகப் படிப்படியாக ஒளி குன்றுதல்

aging of magnet: (மின்.) காந்தத் தளர்ச்சி: ஒரு காந்தத்தினுடைய காந்த நிலைப்பாட்டுத் திறனை மிகுதியாக்கும் செய்முறைக்கு அந்தக் காந்தத்தை உட்படுத்துதல்

agitator: (எந்.) கலக்குக் கருவி: பெரிய அண்டாக்களில் அல்லது பெருந்தொட்டிகளுள்ள அமைப்பான்களை ஒன்றாகக் கலைப்பதற்காகப் பயன்படுத்தபடும் ஓர் எந்திரக் கலக்குச் சாதனம்

agonic line: (மின்.) கோணம் படாத கோடு : பூமியின் மேற்பரப் பினைச் சுற்றி வடக்கு-தெற்குத் திசையிலுள்ள ஒரு கற்பனைக்கோடு. இதில் எல்லாப் புள்ளிகளும் பூஜ்யச் சரிவினையே கொண்டிருககும்

agricultural bolt: (பட்.) வேளாண்மை மரையாணி: உருட்டுச் செய்முறை மூலம் அமைந்த திருகு, சுருள் பட்டைகளை உடற்பகுதியில் கொண்டுள்ள ஒரு மரையாணி


agravic: (விண்.) புவிஈர்ப்பு இன்மை: புவிஈர்ப்பு விசை இல்லாத ஒரு நிலை, எடையின்மை நிலை

agriculture: வேளாண்மை, உழவு: பயிர்களைச் சாகுபடி செய்து விளைப்பொருள்களை விளைவித்தல், கால்நடையைப் பேணி வளர்த்தல் ஆகியன தொடர்பான அறிவியல்

aileron: (வானூ.) வானூர்திச் சிறகின் ஓரமடக்கு : ஒரு வானூர்திச் சிறகின் இழுவை முனையுடன் கீல்அச்சு அலலது சுழல்முனை மூலம் இணைக்கப்பட்டுள்ள ஒரு துணைப் பரப்பு. வானூர்தியின் மீது உருள்கிற சுழற்சியை ஏற்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும்.

ஓரமடக்கு

ailerol angla: (வானூ.) வானூர்திச் சிறகின் ஓரமடக்குக் கோணம்: வானூர்திச் சிறகின் ஓரமடக்கு, அதன் நடுநிலையிலிருந்து கோண இடப்பெயர்ச்சி பெறுதல், வானூர்திச் சிறகின் ஓரமடக்கினுடைய இழுவை முனையானது.நடுநிலைக்குக் கீழிருந்தால், அது நேர்படியானது எனப்படும்

aileron roll: (வானூ.) வானூர்திச் சிறகின் ஓரமடக்கு உருளை: வானூர்திச் சிறகின் ஓரமடக்கு இடபெயர்ச்சியினால் உண்டாகும் விசைகளினால் இயக்கம் பேணப்படுகின்ற ஓர் உருளை

ainico: (மின்.) ஜனிக்கோ: சிறியதான நிரந்தரக் காந்தங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தனிவகை உலோகக் கலவை

air: காற்று மண்டலம் : 'வளிமண்டலம்', 'காற்று மண்டலம்' என்பது பொதுவாக வளிமண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட போதிலும், பூமியின் புறணியை மேலோட்டமாகச் சூழ்ந்திருக்கும் வளிமங்களின் கலவையை இது குறிப்பாகக் குறிக்கிறது