பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

air-acetylene welding: காற்று ஒளிர்வளிம வார்ப்படம்: ஒரு வகை வளிம வார்ப்பட முறை. இதில் காற்றும் ஒளிர்வளிமமும் எரிவதன் மூலமாக வார்ப்பட வெப்பம் பெறப்படுகிறது

air blast: (குளி.) காற்றுத் துருத்தி: வலிந்து ஊட்டும் காற்று விசை

air blast transformer: (மின்.) காற்று வெடிப்பு மின்மாற்றி: இந்த வகை மின்மாற்றியில் அதன் சுருணைகளைச் சுற்றி வலிந்த சுற்றோட்டத்தின் வாயிலாக மிகுதியாக வெப்பமடைதல் தடுக்கப்படுகிறது

air bleed: (தானி;எந்.) காற்றுக் கசிவு: எரிபொருள் கலவையிலுள்ள காற்றின் அளவினை மாற்றியமைக்கும் வகையால் சீரமைவு செய்யத்தக்க ஒரு சிறிய காற்று ஒரதர்

air bound: (வானூ.) காற்று வரம்பு: காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ வானூர்தி சட்டென்று இறங்கும் "காற்று வெறுமை" (air pocket) காரணமாக, வானூர்தியின் உறுப்புகளில் எதுவும் இயங்குவதைத் தடை செய்யும் வரம்பு.

air brake: (தானி: எந்) காற்றுத் தடுப்பி: அழுத்தம் பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக் கட்டை அல்லது வேகத்தடைக் கருவி

air breakup: (விண்.) காற்று மண்டலத் தகர்வு: ஒரு பொருள் விண்வெளியிலிருந்து பூமியின் காற்று மண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்ததும் உடைந்து சிதைந்து போதல்

air breather: (விண்.) காற்று வாங்கி: வாயு மண்டலத்திலிருந்து உள்ளிழுக்கப்படுவதன் வாயிலாக ஆக்சிஜனுடன் இணைவுற்ற எரிபொருள் வாயிலாக முன்னோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணை அல்லது விண்கலம்

air brush lettering: (ஓவியம்) காற்றுத் தூரிகை எழுத்துரு: அழுத்தப்பட்ட காற்றின் வாயிலாக மையினையும் வண்ணங்களையும் தெளிப்பதற்குப் பயன்படும் காற்றுத் தூரிகை என்ற கருவியைக் கொண்டு எழுத்துருக்களைத் தீட்டுதல் அல்லது எழுத்துருக்களுக்கு நிழற்படி வண்ணம் தீட்டுதல்

air capacitor: (மின்.) காற்று மின்னியல் உறைக்கலம்: மின்அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருளாகப் பயன்படுத்துகிற ஒரு மின்னியல் உறைகலம்

air cell: (மின்.) காற்று மின்கலம்: மின்காந்த முனைப்பியக்கம் அகற்றப்பட்ட வகையைச் சேர்ந்த ஒர் அடிப்படை மின்கலம். இதில் ஒரு தனிவகை கரிம மின் முனையானது மின்காந்த முனைப்பியக்க அகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. அது, காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுக்கிறது

air chamber: (பொறி.) காற்றறை: நீர் விசைப் பொறிகளின் சம அழுத்தத்திற்குரிய காற்றறை. இறைக்கப்படும் திரவத்தின் அதிர்வுறு வெளியேற்றத்தை இயன்ற அளவு குறைப்பதற்காக உந்து இறைப்பிகளின் அமைக்கப்பட்டுள்ள ஒரு கலம். இந்த அறையில், அழுத்தப்பட்ட நிலையில் காற்று இருக்கும். இதன் அடிப்பகுதியில் ஒரு வடிகுழாய் பொருத்தப்பட்டிருக்கும். உந்துதண்டினை அடித்து இயக்குவதன் மூலம், இறைப்பியிலிருந்து சிறிதளவு திரவம் இந்த வடிகுழாய் வழியாக வலிந்து செலுத்தப்படுகிறது.உந்து தண்டின் உறிஞ்சு அடிக்கும்