பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அயற் பொருள்களையோ கலந்து தூய்மையைக் கெடுத்தல்

advance: (தானி:மின்.) முன்னீடு: (1) உந்துதண்டு நிலையின் உச்சிநிலை மையத்தின் நேரத்தைப்பொறுத்து மின்பொறி உண்டாகும் நோத்தைச் சீரமைவு செய்தல்

(2) மின்னியற் கருவி வேலைக்குப் பயன்படுத்தப்படும் செம்பும் நிக்கலும் கலந்த ஒர் உலோகக் கலவை (உலோகவியல்)

advertising: விளம்பரம் செய்தல்: பொது அறிவிப்புகளைத் தயாரித்துப் பொது மக்களிடையே பரப்பும் செயல்

adz: செங்கோண வெட்டுக் கருவி: கைப்பிடிக்குச் செங்கோணத்தில் வெட்டுக் கத்தி அமைந்துள்ள ஒரு வகை வெட்டுக் கருவி

adz-eye hammer: (மர.வே.) செங்கோண முகப்புச் சம்மட்டி : ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய வார்சுத்தியல்.இதில் முகப்பு, மற்ற சுத்தியல்களைவிடக் கூடுதலாக நீண்டு கைப் பிடிவரை அமைந்திருக்கும்

aerated water: (வேதி.) காற்றுட்டிய நீர் : காற்றினைச் செலுத்தித் தூய்மையாக்கப்பட்ட நீர்

aeration: (வேதி.) காற்றுட்டல்: (1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல்

(2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்டத்திலிருந்து, ஒர் எந்திர சாதனத்தின் மூலம் கழிவு நீரின் மட்டத்தை உயர்த்தி, நீரை வெளியேற்றுவதற்குப் பயன்படும் ஒரு துணை நிலைத் தொட்டி

aerial:வான்கம்பி:(மின்.) கம்பியில்லாத் தந்தியில் பயன்படும் ஒரு சொல். இதில் தனியொன்றான அல்லது தொகுதியான மின்ஊடு கடத்திகள் அமைந்திருக்கும். சைகைகளைத் தாங்கி வரும் மின்காந்த அலைகளை விண்வெளியிலிருந்து ஏற்றிணைத்துக் கொள்வதற்கு அல்லது விண்வெளியில் அவற்றைப் பரப்புவதற்காக, கட்டிடங்கள், கோபுரங்கள், உயர்ந்த கம்பங்கள் ஆகியவற்றின் உச்சியில் இரு முனைகளுக்கிடையே தொங்கவிடப்பட்டிருக்கும். 'வானலைக் கொடி' (antenna) என்றும் இதனை அழைப்பர்

aerial metal : (உலோ.) வான்கம்பி உலோகம்: அலுமினியமும் விதியமும் கலந்த மிக வலுவான உலோகக்கலவை, ஆனால் இதன் கனம் மிகக் குறைவு

aeroballistic missile: (விண்.) விண்வழி ஏவுகணை: பூமியின் வாயுமண்டலத்திற்குள் ஒலியினும் விஞ்சிய வேகத்தில் பறப்பதற்கான உந்து விசையினையும் தொடர்ச்சியான சுழற்சி உத்தியினையும் கொண்ட ஒர் இறகற்ற விண்கலம்

aerodynamic balanced surface : (வானூ.) வளியியக்கத் சமநிலைப் பரப்பு : கீல் அச்சினை அல்லது சுழல் முனையைச் சுற்றி இணைவாக்க விளைவு நெம்பு திறனை மிகச் சிறிய அளவில் ஏற்படுத்துகிற அல்லது இல்லாமலே செய்கிற வகையில் அந்தக் கீல் அச்சின் சுழல் முனையின் இருபக்கங்களிலும் நீண்டிருக்கிற அல்லது அதனுடன் துணைச் சாதனங்களை அல்லது விரிவாக்கங்களை