பக்கம்:புதிய கோணம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 : புதிய கோணம்

வரைக் காண்பது கடினம். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் தொண்டாற்றினர். ஆனால் திரு.வி.க. தொண்டின் தொடர்பு இல்லாத தமிழர் வாழ்வுப் பகுதி ஒன்றுமே இல்லை என்று கூறி விடலாம்.

இவை அனைத்திலும் மேலாக அவருடைய தூய வாழ்வு பிற்காலத் தமிழர்க்கு என்றும் ஓர் எடுத்துக் காட்டாக இலங்கும். ‘அகப் புறத் தூய்மை, எளிய வாழ்வு, சினம்-பொறாமை முதலிய தீக்குணங்கள் இன்மை, துறவுள்ளம் என்பவற்றோடு பொன், பெண், மண் என்ற மூன்றிலும் ஒரு சிறிதும் செல்லாத அத்துTய உள்ளத்தை இனி எங்கு கானப் போகிறோம்! உள்ளத்தைப் போல் உடலிலும் வெள்ளிய கதராடை உடுத்திய இராயப்பேட்டை முனிவர் எவ்வளவு பெரியவர்! அறிவாளரும், கற்றவர் களும் நிறைந்த தமிழ் நாட்டில் நல்லவர், பெரியவர் என்று கூறத் தக்கவர் குறைந்துள்ள தமிழ் நாட்டில், திரு.வி.க. நன்மையின் கொள்கலமாய், பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய், தூய்மையின் விளக்கமாய் ஒழுக்கத்தின் உறையுளாய், பழமையின் பண்புவிடாத வராய், புதுமையின் வேட்கை தவிராதவராய் வாழ்ந்தார். அவரை நினைக்கும் போது எத்துணைப் பெரியவர்: எத்துணை நல்லவர்!’ என்று எண்ணி எண்ணிப் பெருமை கொள்ளத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/240&oldid=659958" இலிருந்து மீள்விக்கப்பட்டது