12
‘வாழையடி வாழை’
கலைகள் (aesthetic arts) என்று வழங்கப்படும். இக்கலைகள் உணர்ச்சியும் கற்பனையும் நிறைந்தவை; அழகுப் பொருள்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு எஞ்ஞான்றும் இன்பம் அளிப்பவை.[1] ஆங்கில அறிஞர் 'ஜான் ரஸ்கின்’ என்பவர், 'கடவுட்படைப்பில் விந்தையைக் கண்டு மனிதன் பெறும் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவதே சிறந்த கலையாகிறது' என்கிறார்.[2]
மேற்கூறப்பட்ட நுண்கலைகளிலே சிறந்த கலையாய் விளங்குவது கவிதைக்கலையாகும். இது சொற்களாலேயே அமைந்த கலையான காரணத்தால், மொழித்திறத்தை உணர்ந்தவர் மட்டுமே இதை அனுபவிக்க இயலும். 'கவிஞன் பிறக்கிறான்; உருவாக்கப் படுவதில்லை’[3] என்பது இலத்தீன் மொழியின் பழையதொரு சொல் தொடராகும்.
நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை நாம், நம் கண்களால் காண்கின்றோம். ஆனால், கவிஞன் காண்கின்ற நோக்கும், அதன் வெளியீடாக வருகின்ற கவிதையும் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. கவிஞன், காட்டுப் பறவையின் ஒலியிலும், காற்று, மரங்களிடைக் காட்டும் இசையிலும், ஆறு அருவி நீரோசைகளிலும், அலைகடலின் ஆரவாரத்திலும் தன் மனத்தைப் பறிகொடுத்து நிற்கிறான்; கவியரசர் பாரதியார் நெஞ்சைப் பறிகொடுத்த இடங்களைப் பாருங்கள்.
'கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்