பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 365 சிகரங்கள் நீண்ட மகா விசேடமான கோபுர முகப்பில் (வாயிலில்) வீற்றிருப்பவனே! ஆறட்சரங்களுக்கு உரியவனே! சேணாடு (விண்ணுலகம்) போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வீற்றிருப்பவனே! தேவர்கள் தம்பிரானே! (மா பாவிகள் இன்பம் ஆமோ) 342 பொருளைக் கவர்வதே மனத்திற்கொண்ட (எண்ணமாகக் கொண்ட) மாதர்களுடைய புழுகு (வாசனைப்பண்டம்), அகில், சந்தனம், பன்னிர் ஆகிய இவைகள் தோய்ந்த புளகிதங் கொண்ட கொங்கை நெகிழ அசைய, அணிந்துள்ள (முத்துசரம் முதலிய), மணி மாலைகள் புரள, இடையில் ஆடை நெகிழ இருள் நிறைந்த (கரிய) கூந்தல் சரிய (அவிழ்ந்து புரள), மனம் ஒத்துச் சேருகின்ற, குற்றத்துக்கு இடமான, காமப்பற்றில் பட்டுக் கெடுதல் நீங்கி, மனது நெகிழ்ந்து உருகி, உன்னுடைய இணையடிகளை என்று நான் புகழ்வேனோ! மோகத்துடன் சென்று அன்புடன் அன்று (வள்ளி) மலையில் விளைந்த தினைப்புனம் காவல்கொண்ட மயில்போன்ற வள்ளியை மணந்த வேலவனே! எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகனே! தெளிந்த அறிவை உடைய அன்பர்கள் போற்ற விளங்கு கின்ற திரிசிராமலையில் ஆதிநாள் முதலாக - விளங்க வீற்றிருக்கும் பெரி யவர் - தாயுமானவர் (சிவபிரான்) அருளிய சிறியோனே குழந்தையே) - தேவர் பெருமாளே! - (உன் இணையடி என்று புகழ்வேனோ)