பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1064

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 505 (வதனம் சசி) சசி.சந்திரன் போன்ற (வதனமும்) திருமுகமும், பால் அமுதம் பொழியும் கொங்கையும் கொண்ட நல்ல குறப்பெண். வள்ளியுடனும், அவ்வள்ளியுடன் (இசையும்) அன்பு பொருந்தும் (தேவர் வளர்த்த மங்கை) தேவசேனையுடனும் உள்ளம் மகிழ்ச்சி மிக வளர்ச்சியுறும் திருப்பந்தனை நல்லூர் என்னும் தலத்தில் வந்து வீற்றிருக்கும் சிவபிரானது குருமூர்த்திப் பெருமாளே (மாயைத் துயர்திராய்) பெரிய எனது பழைய வினை (சஞ்சித வினை) பயப்படும்படியும் (அல்லது சஞ்சிதவினை, பிராரத்தவினை இரண்டும் அஞ்ச-பயப்பட, வருவினை ஆகாமியவினை வந்து இனித் தாக்கவேண்டிய வினைகளும் - நாங்கள் வரவில்லை எனக் கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்வகைகள் வாராது மடிய, மலம் - ணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும், மாய - அழிந்தொழிய என்னுடைய வருத்தமெல்லாம் குறைந்து ஒழிய, உன்னுடைய திருவருள் மேம்பட்டுப் பெருக இசையுடனே பரிசுத்தமான உனது திருப்புகழை ஒதி. (திருமுக சந்த்ர) சந்திரன்போன்ற குளிர்ந்த அழகிய திருமுகத்தை உடையவனே முருகா! கடம்பா சிவ குமாரா கந்தா! குகா! வேலா! சிவ சிவ - என்று கூறி அதனால்-தெளிவுபெற்ற எனது நெஞ்சு பொலிவுபெற, நடனம்புரியும் உனது திருவடியைத் தந்தருளுக; ரம், கம்சன் இவர்தம் உயிரைப் பலி கொண்டு (மாய்த்து) மகிழ்ந்த அரி-திருமாலின் மருகனே!

  • சஞ்சிதவினை பழவினையுள் அனுபவித்தது போக எஞ்சிநிற்பது. இது குருவின் திருநோக்கால் அழிந்துபோம்.

பிராரத்தம்-இம்மையிற் பயனளிக்கும் பழவினை. தனுவினெடுக்கும் பிராரத்தம்" - விநாயகபுரா-83-19, ஆகாமியம் இனி உறும் பிறப்பில் வரும் புண்ணிய பாவங்கள் மேல்வரும் ஆகாமியமும்" திருக்காளத்தி புரா-12-28 "சஞ்சிதம் எல்லாம் ஞானத்தழல் சுட்டு வெண்ணிறாக்கும் கிஞ்சிலா காமியந்தான் கிட்டாமல் விட்டுப்போகும் விஞ்சின பிராரத்வத்தின் வினை அனுபவித்துத் திரும்" - கைவல்யநவ.