பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குருவினாலன்றி ஞானம் பெறுதல் இயலாது কো স্ট্রে அறிவுறுத்துவது.

"குரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலச் சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே" (17)

எனவரும் திருமந்திரமாகும். "சூரியகாந்தக்கல்லும் அதனைச் சூழவைத்த பஞ்சும் போல் (உயிர்களின் மலத்தைச் சுட்டெரித்தற்குரிய சிவமும் அதனைப் பற்றாகப் பற்றியுள்ள ஆன்மாவும்) பிரிவறக்கூடிய இயைபுடையனவாயினும், சூரியகாந்தக்கல் தன்னகத்தேயுள்ள நெருப்பினால் தன்னைச் சூழவைத்துள்ள பஞ்சினைச் சுட்டெரித்தல் இல்லை. அத்தகைய சூரிய காந்தக்கல் ஞாயிற்றின் முன்னிலையைச் சார்ந்தபோது, அதனின்றும் தோன்றும் தீ பஞ்சினைச் சுட்டெரித்தல் போன்று, (இறைவன்) குருவாகத் தோன்றிய அந்நிலையில் வெளிப்பட்ட சிவஞானத்தீயினால் உயிரைச் சூழ்ந்துள்ள மலங்களாகிய பஞ்சுத் தொகுதி சுடப்பட்டு அழிந்தன” என்பது இதன் பொருளாகும்.

இறைவனை உயிர்க்குயிராகத் தன்னுள் கொண்ட பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சூரிய காந்தக்கல்லும், ஆன்மாவைப் பிணித்துள்ள மலங்களுக்குப் பஞ்சும், ஞானாசிரியன் முன்னிலையில் மாணாக்கனது அறிவின் கண்னே சிவஞானம் வெளிப்பட்டு மலங்களையழித்தற்குச் சூரிய காந்தக்கல் சூரியன் முன்னிலையிற் பொருந்திய அளவில் அதன்கண் நின்று தீ வெளிப்பட்டுப் பஞ்சினைச் சுட்டெரித்தலும் உவமையாகும். இத்திருமந்திரப்பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது,

“சூரிய காந்தக்கல்லி னிடத்தே செய்ய

சுடர்தோன்றியிடச்சோதி தோன்று மாபோல் ஆரியனாம் ஆசான்வந்தருளால் தோன்ற

அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத் துரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும்

தொல்லுலக மெல்லாந்தன் னுள்ளே தோன்றும்