பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சி ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் வடிவாகி, மலைகொண்ட வேடுவர் கானு டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் குமரேசா. 'மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் பெருமாளே. திரிசிராப்பள்ளி (சம்பந்த சுவாமிகள் அப்பர் சுவாமிகள் இவர்களது பாடல் பெற்ற தலம். திரிசிரன் என்னும் அரக்கன் பூசித்த திருப்பதி. இத்தலத்துத் தாயுமானவர் கோயில் மிகவும் விசேடமானது. சைவ எல்லப்ப நாவலர் பாடிய செவ்வந்திப் புராணமும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய உறையூர்ப் புராணமும் இத்தலத்துப் பெருமையை விளக்குவன. பாடல் 235, 352. இவையுள்ளும் இத்தலம் கூறப்பட்டுள்ளது.) 329. திருவடியைத் தொழ தந்த தாத்தன தத்தத் தானன தந்த தாத்தன தத்தத் தானன தந்த தாத்தன தத்தத் தானன தனதான அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய கொங்கை காட்டிம றைத்துச் சீரிய அன்பு போற்பொய்ந டித்துக் காசள வுறவாடி அம்பு தோற்றக ணிட்டுத் தோதக f இன்ப சாஸ்த்ரமு ரைத்துக்#கோகிலம் அன்றில் போற்குர லிட்டுக் கூரிய நகரேகை; 'மதிமிஞ்சு போதக ஞானாஈசா, செவியின் சொல்வாசக வேத திதா, மகிழ் சம்பு தானருள் வேலா வானோர் பெருமாளே என்றும் பாடபேத முண்டு (அடுத்த பக்கம் பார்க்க)